தொடங்கியது பொது வேலை நிறுத்தம் !! பெட்ரோல் , டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகத்தில் இன்று மறியல் போராட்டம் !!

By Selvanayagam PFirst Published Sep 10, 2018, 6:26 AM IST
Highlights

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று  மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் இந்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று திமுக, காங்கிரஸ், இடதுசாரிக்கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் மத்திய தொழிற்சங்கங்களும் முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளன. தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் 2.3 லட்சம் ஆட்டோக்கள்  ஓடவில்லை.

மோடி அரசு கடைப்பிடித்து வரும் பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன என்று  எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க் கட்சிகளின் சார்பில் இன்று  நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகளின்  சார்பில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி  காலை 10 மணிக்கு, சென்னை, மதுரை,கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட இடங்களில் திமுக, காங்கிரஸ், இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள்  சார்பில் மறியல் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.

click me!