வாட்ஸ் ஆப் மூலம் பறிபோன பெண்ணின் வாழ்க்கை! அதிரடியாக திருமணத்தை நிறுத்திய மணமகன்!

By manimegalai aFirst Published Sep 9, 2018, 12:43 PM IST
Highlights


தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் சமூகவலைத்தளங்களுடன் தொடர்பில்லாத நபர் யாரும் இல்லை எனறே கூறலாம். அப்படி 
இருக்கையில் மணப்பெண் ஒருவர் அதிகமாக வாட்ஸ் அப் பயன்படுத்துவதாக கூறி, மணமகன் திருமணத்தையே நிறுத்திய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் சமூகவலைத்தளங்களுடன் தொடர்பில்லாத நபர் யாரும் இல்லை எனறே கூறலாம். அப்படி 
இருக்கையில் மணப்பெண் ஒருவர் அதிகமாக வாட்ஸ் அப் பயன்படுத்துவதாக கூறி, மணமகன் திருமணத்தையே நிறுத்திய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நவ்கோயன் சதன் கிராமத்தை சேர்ந்தவர் உரோஜ் மெகந்தி. இவரது மகளுக்கும், 
கமர் ஹைதர் என்பவது மகனுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. அதன்படி கடந்த புதன்கிழமை அன்று திருமணம் நடத்துவதாக 
திட்டமிடப்பட்டது.

திருமண நாள் அன்று மணமகள் வீட்டில் திருமணத்துக்காக எல்லோரும் தயாராக இருந்தனர். முகூர்த்த நேரமோ நெருங்கிக் 
கொண்டிருந்தது. ஆனால் மணமகன் வீட்டைச் சேர்ந்த ஒருவரும் வரவில்லை. 

இதனால் பதற்றமடைந்த பெண் வீட்டார், மணமகன் வீட்டாருக்கு போன் செய்தனர். அப்போது போனில் பேசியவர், இந்த திருமணம் 
நடைபெறாது. உங்க பெண் எப்போது பார்த்தாலும் வாட்ஸ் அப்-லேயே இருக்குறாங்க. இப்பகூட எங்களுக்கு வாட்ஸ் ஆப்ல மெசேஜ் 
அனுப்பி இருக்காங்க. இது எங்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மணமகன் வீட்டாரின் இந்த பதிலால் மணமகள் வீட்டார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் போலீசில் புகாரும் 
கூறினர். வரதட்சணை அதிகமாக கேட்டு திருமணத்தை மணமகள் வீட்டார் நிறுத்தி விட்டதாக புகாரில் கூறினர்.

இது குறித்து மணமகளின் தந்தை மெகந்தி, திருமணத்துக்காக உறவினர்கள் அனைவரும் கூடியிருந்தோம். ஆனால் மணமகன் வீட்டில் 
இருந்து யாரும் வரவில்லை. போன் செய்து கேட்டபோது, திருமணத்தை நிறுத்திவிட்டதாக கூறினர். இது அதிர்ச்சியாக இருந்தது. இது 
குறித்து போலீசில் புகார் கூறியுள்ளோம் என்கிறார் .

மணமகள் வாட்ஸ் ஆப்-ஐ அதிகமாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டதாலேயே திருமணத்தை நிறுத்தியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். திருமணத்துக்கு முன்புகூட மாமனார் - மாமியாருக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். எப்போதும் வாட்ஸ் ஆப்-பில் இருப்பது பிடிக்காமல் தான் திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

click me!