வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி… பெட்ரோல், டீசல் விலை “அதிரடிக் குறைப்பு”! இதோ விலை பட்டியல்!

Asianet News Tamil  
Published : Oct 05, 2017, 08:26 AM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி… பெட்ரோல், டீசல் விலை “அதிரடிக் குறைப்பு”! இதோ விலை பட்டியல்!

சுருக்கம்

Petrol Diesel Prices Drop Sharply Today After Excise Duty Cut

எரிபொருட்களுக்கான கலால்வரியை மத்திய அரசு நேற்றுமுன்தினம் குறைத்ததைத் தொடர்ந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25 காசுகளும் குறைத்து அரசு எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்துள்ளன.

இதையடுத்து, டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.70.88 லிருந்து, ரூ.68.38 காசுகளாகக் குறைந்தது. டீசல் விலை ரூ.59.14 லிருந்து ரூ.56.89 காசுகளாகக் குறைந்தது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிதி இயக்குநர் ஏ.கே.சர்மா கூறுகையில், “ கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 குறைத்து மத்திய அரசு நேற்றுமுன்தினம் அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.25 காசுகளும் குறைக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு கலால்வரியை குறைத்ததன் மூலம் அரசுக்கு ரூ.26 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

நாள் தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றும் திட்டம் கொண்டுவரப்பட்டதில் இருந்து, ஜூலை 4ந்தேதிமுதல், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.80 காசுகள் உயர்ந்து, ரூ.70.88க்கு விற்பனையானது. இது கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பின் அதிகபட்சமாகும். அப்போது, பெட்ரோல் ரூ.5.70காசுகள் அதிகரித்து ரூ.59.14 காசுகளாக உயர்ந்தது.

சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் மோசமாக வீழ்ச்சி அடைந்த நிலையில் அந்தபலன்களை சாமானிய மக்களுக்கு தராமல், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 2014 ஜனவரி முதல் 2016 ஜனவரி வரை 9 முறை உயர்த்தி, அதன் பலன்களை எடுத்துக் கொண்டது. இதனால், மத்திய அரசு மீது அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்ச்சித்தன.

கடந்த 15 மாதங்களில் பெட்ரோல் மீது கலால்வரி ரூ.11.77 காசுகளும், டீசல் மீது ரூ.13.47 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கலால்வரி உயர்வு மூலம், அரசுக்கு 2016-17ம் ஆண்டில் ரூ.2.42 லட்சம் கோடி கிடைத்துள்ளது. இது கடந்த 2014-15ம் ஆண்டு ரூ.99 ஆயிரம் கோடி மட்டுமே இருந்தது.

இதற்கு முன் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பரில் பெட்ரோல் அதிகபட்சமாக லிட்டர் ரூ.76.06க்கு டெல்லியில் விற்பனை செய்யப்பட்டது. 2014ம்ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் டீசல் விலை லிட்டர் ரூ.58.97 காசுகளுக்கு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ விலை பட்டியல்! 

 

 

PREV
click me!

Recommended Stories

உலக GDP-யில் 25%: இந்திய-ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தால் அமெரிக்கா, சீனாவுக்கு ஏன் பதற்றம்?
சிக்கியது ஈரானை தாக்கச் சென்ற அமெரிக்க கப்பல்..! வழியில் தடுத்து நிறுத்திய 3 இஸ்லாமிய நாடுகள்..!