மறுபடியும் ஏற தொடங்கிய விலை… கலங்கி தவித்த வாகன ஓட்டிகள்…

Published : Oct 05, 2021, 08:04 AM IST
மறுபடியும் ஏற தொடங்கிய விலை… கலங்கி தவித்த வாகன ஓட்டிகள்…

சுருக்கம்

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது வாகன ஓட்டிகளை கலக்கம் அடைய வைத்துள்ளது.

சென்னை:  பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது வாகன ஓட்டிகளை கலக்கம் அடைய வைத்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலைகளை தினசரி எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. கொரோனா ஊரடங்கு சமயத்தில் சில காலம் விலைகள் மாற்றம் இன்றி இருந்தன. ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர ஆரம்பித்து உள்ளன.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு உள்ளன. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 22 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 100.23 காசுகளாக உள்ளது. டீசல் 28 காசுகள் அதிகரித்து 95.59 காசுகளுக்கு இருக்கிறது. இந்த புதிய விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

கடந்த சில நாட்களாக உயரும் விலையேற்றத்தில் வாகன ஓட்டிகள் கடும் கலக்கத்தில் உள்ளனர். தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்ட போதிலும் ஒரு லிட்டர் 100 ரூபாயை தாண்டி விற்பனையாவது வாகன ஓட்டிகளை அதிருப்தியில் கொண்டு சென்று விட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

வரலாற்றில் எந்த தலைவருக்கும் கிடைக்காத கௌரவம்.. பிரதமர் மோடியை பெருமைப்படுத்திய எத்தியோப்பியா..
டிசம்பர் 18 முதல்.. பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் இல்லை.. முழு விபரம் உள்ளே!