பெட்ரோல், டீசல் விலையில் ரூ. 2 குறைவு.. முதல்வர் அதிரடி..!

By sathish kFirst Published Sep 10, 2018, 5:04 PM IST
Highlights

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ.2 குறைக்க உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார். இதனால்  வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ.2 குறைக்க உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார். இதனால்  வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த விலை  குறைப்பு இன்று  நள்ளிரவு முதல் அமலுக்கு   வரும் என  கூறப்பட்டு  உள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல்  மற்றும் டீசல் விலை  உயர்வை கண்டித்து மாபெரும்  கடை  அடைப்பு போராட்டம்  இன்று  நடந்து வருகிறது .

இதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று திமுக, காங்கிரஸ், இடதுசாரிக்கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் மத்திய தொழிற்சங்கங்களும் முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளன. தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் 2.3 லட்சம் ஆட்டோக்கள்  ஓடவில்லை.

மோடி அரசு கடைப்பிடித்து வரும் பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன என்று  எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க் கட்சிகளின் சார்பில் இன்று  நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.இதையொட்டி  காலை 10 மணிக்கு, சென்னை, மதுரை,கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட இடங்களில் திமுக, காங்கிரஸ், இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள்  சார்பில் மறியல் போராட்டங்கள்  நடைப்பெற்றன.

இந்நிலையில் ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ.2 குறைக்க உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார் . இதனால்  வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

click me!