பீர் பாட்டில்களுடன் கவிழ்ந்த வேன்.. அள்ளிச்சென்ற மதுப்பிரியர்கள் - வைரல் வீடியோ !!

Published : Jun 06, 2023, 06:19 PM ISTUpdated : Jun 06, 2023, 06:24 PM IST
பீர் பாட்டில்களுடன் கவிழ்ந்த வேன்.. அள்ளிச்சென்ற மதுப்பிரியர்கள் - வைரல் வீடியோ !!

சுருக்கம்

ஆந்திரா பிரதேச மாநிலத்தில் பீர் பாட்டில்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் ஒரு வைரல் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆந்திராவின் காசிம்கோட்டா மண்டல் மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்றே சொல்லலாம்.

பையாவரம் தேசிய நெடுஞ்சாலையில் 200க்கும் மேற்பட்ட பீர் பெட்டிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது.  உடனே, அப்பகுதி மக்கள், உடைக்கப்படாத பீர் பாட்டில்களை எடுத்துச் செல்ல விரைந்தனர். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்தது.

இதையும் படிங்க..iPhone 11 வெறும் ரூ.8,950க்கு கிடைக்கிறது! இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது - முழு விபரம் !!

200க்கும் மேற்பட்ட பீர் பெட்டிகள் சாலையில் விழுந்தன. பின்னர், அப்பகுதி மக்கள் விரைந்து வந்து உடைக்கப்படாத பீர் பாட்டில்களை எடுத்துச் சென்றனர். சம்பவத்தின் வீடியோவில், தரையில் கிடக்கும் பீர் பாட்டில்களை எடுக்க மக்கள் துடிக்கிறார்கள். சேதமடையாத மது பாட்டில்களைத் தேடுகிறார்கள்.

ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு கொண்டு பீர் பாட்டில்களை எடுத்து செல்வதை வீடியோவில் காணலாம். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. 150 கேமராக்கள்.! இனி பொது இடங்களில் குப்பையை கொட்டினால் அவ்வளவுதான்

PREV
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!