"ரூ.1900க்கு பேனா வாங்குங்க... பரிட்சையில் பாஸ் ஆகலன்னா பணம் வாபஸ்" - ஜோராக’ விற்பனை செய்யும் குஜராத் கோயில்

Asianet News Tamil  
Published : Mar 13, 2017, 05:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
"ரூ.1900க்கு பேனா வாங்குங்க... பரிட்சையில் பாஸ் ஆகலன்னா பணம் வாபஸ்" - ஜோராக’ விற்பனை செய்யும் குஜராத் கோயில்

சுருக்கம்

pen business in gujarat temple

குஜராத் மாநிலம், பஞ்சமஹால் மாவட்டத்தில் ஒரு கோயிலில் ரூ.1900க்கு விற்பனை செய்யப்படும் பேனாக்களை வாங்கி தேர்வு எழுதினால் 10ம், 120ம் வகுப்பு மாணவர்கள் கண்டிப்பாக பாஸ் செய்வார்கள். இல்லாவிட்டால், பணம் திருப்பி அளிக்கப்படும் என்ற விளம்பரம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பாக வலம் வருகிறது.

பஞ்சமஹால் மாவட்டத்தில், கஸ்தாபஞ்சன் கோயில் உள்ளது. இங்குள்ள அனுமன் பக்தரானதுஷ்யந்த் பாபுஜி என்பவர் வித்தியாசமான ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்.

அதில்,  தாங்கள் சரஸ்வதி ஹனுமன் பூஜையில் வைத்து விற்பனை செய்யபடும் பேனாக்களை வாங்கி 10ம், 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதினால், கண்டிப்பாக தேர்ச்சி பெறுவார்கள். அவ்வாறு அவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால், உங்கள் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமா? உங்கள் பிள்ளைகள் தேர்வில் பாஸ் ஆக வேண்டுமா?, உங்கள் மகன், மகள் தேர்வில் மோசமான மார்க், அல்லது தோல்வி அடைந்து விடுவார்கள் என அச்சப்படுகிறீர்களா? உங்களின் மகன் அல்லது மகள் 8, 9ம், 10ம், 12ம் வகுப்பு, கல்லூரிகளில் தடையின்றி பாஸ் ஆக வேண்டுமா? எங்களின் ரூ.1900, மேஜிக் பேனாக்களை வாங்கி தேர்வு எழுதக்கொடுங்கள் நிச்சயம் பாஸ் ஆவார்கள். இல்லாவிட்டால்  பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேனாக்களை வாங்க வரும்போது, யாருக்கு பேனா வாங்க விரும்புகிறோமோ? அந்த மாணவர், அல்லது மாணவியின் ‘ஹால்டிக்கெட்’ , கல்லூரி அல்லது பள்ளி அடையாள அட்டை,மொபைல் எண், தேர்வுச்சீட்டு ஆகியவற்றின் நகலை அளிக்க வேண்டும். அதை வைத்து பூஜை செய்தபின் அந்த பேனாக்கள் விற்பனை செய்யப்படும்.

100 சதவீதம் பாஸ் உத்தரவாதத்துடன் பேனாக்கள் விற்பனை செய்யப்படுவதால், இந்த கோயிலுக்குமாணவர்கள் கூட்டமும், பெற்றோர்கள் கூட்டமும் படை எடுத்து வருகிறது.

 

PREV
click me!

Recommended Stories

ஆன்லைனில் வாக்கி-டாக்கி விற்பனை.. பிளிப்கார்ட், மீஷோ உள்ளிட்ட 8 நிறுவனங்களுக்கு விழுந்த அடி!
350 ஹை-டெக் AI கேமரா.. பெங்களூரு மைதானத்தில் ரோபோ கண்காணிப்பு.. ஆர்சிபி ரசிகர்கள் குஷி!