முன்ன பின்ன விசாரிக்காம டிரைவர் வேலைக்கு ஆள் சேர்க்கறாங்க; ஓலா கேப்ஸ்-ல கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க;

 
Published : May 27, 2018, 07:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
முன்ன பின்ன விசாரிக்காம டிரைவர் வேலைக்கு ஆள் சேர்க்கறாங்க; ஓலா கேப்ஸ்-ல கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க;

சுருக்கம்

passengers be aware while travelling in this cabs

பருல் யாதவ் எனும் நடிகை சமீபத்தில் ஓலா கேப்ஸ்-ல் பயணம் செய்தபோது, தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார். இவர் தமிழில் தனுஷுடன் ட்ரீம்ஸ் என்னும் திரைப்படத்திலும், புலன்விசாரனை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறார்.

பெங்களூரில் வசித்துவரும் இவர் விமான நிலையம் செல்வதற்காக ஒருமுறை ஓலா கேப்ஸ்-ஐ அழைத்திருக்கிறார். பயணத்தின் போது இடையில் சில நிமிடங்கள் இறங்கி ஏதோ பொருளை வாங்கி விட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்திருக்கிறார். கடைசியாக இறங்கும் போது பார்த்தால் அவர் ”50ஆம் ஆண்டு நினைவுபரிசாக யாருக்கோ பரிசளிக்க வைத்திருந்த விலை உயர்ந்த கடிகாரம் அடங்கிய பையை காணவில்லை”..

இது குறித்து அந்த டிரைவரிடம் விசாரித்தபோது அவர் எனக்கு எதுவும் தெரியாது. என கூறிவிட கடைசியில் போலீசிடம் சென்றிருக்கிறது இந்த பிரச்சனை. அதன் பிறகு பருல் யாதவின் கடிகாரம் அவருக்கு கிடைத்திருக்கிறது.

இது குறித்து பேசிய பருல் “ ஓலா கேபில் டிரைவர்களை விசாரித்துவிட்டு சேர்ப்பது இல்லை. மேலும் வாடிக்கையாளர்கள் ஏதாவது புகார் அளித்தால் அதை அவர்கள் கவனிப்பதும் இல்லை. எனவே ஓலா கேபில் பயணிப்பவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்” என கூறியிருகிறார்.

PREV
click me!

Recommended Stories

நாடு சுக்கு சுக்காக சிதறிவிடும்..! பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலால் சீமான் ஆவேசம்
வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு