கர்வம் பிடித்த காங்கிரஸ்.. கூட்டணியே வேண்டாம்... ‘கை’ கழுவியது ஆம் ஆத்மி

By Asianet TamilFirst Published Jan 19, 2019, 3:16 PM IST
Highlights

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. டெல்லியில் காங்கிரஸ் ஓட்டுகளை முழுமையாகக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்டியதால், ஆம் ஆத்மியுடன் கூட்டணி சேர டெல்லி மாநில காங்கிரஸார் தயக்கம் காட்டி வந்தார்கள். இந்நிலையில் டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்ற ஷீலா தீட்சித, ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார். 

இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று ஆம் ஆத்மி கட்சியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் டெல்லி அமைப்பாளர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் பேசுகையில், "காங்கிரஸ் கட்சி கர்வமாக உள்ளது. எங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் கொள்கையோடு உடன்பாடில்லை. 

ஆனாலும், மத்தியில் பாஜகவை வீழ்த்த கூட்டணி அவசியம் என நினைத்தோம். அதற்காகத்தான் காங்கிரஸ் கூட்டணியைச் சகித்துகொள்ள முடிவு செய்திருந்தோம். ஆனால், ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என்று ஷீலா தீட்சித் கூறிவிட்டார். இது காங்கிரஸ் கட்சியின் கர்வத்தைக் காட்டுகிறது.

  

ஆம் ஆத்மி பலமாக உள்ள டெல்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தனித்தே போட்டியிடுவோம்” என்று தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் காங்கிரஸ் கட்சியின் மெகா கூட்டணி கனவு சிதைந்துவிட்டது. 

click me!