“5வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்” – எதிர்கட்சியினர் அமளியால் பகல் 12 வரை ஒத்திவைப்பு

Asianet News Tamil  
Published : Nov 24, 2016, 12:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
“5வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்” – எதிர்கட்சியினர் அமளியால் பகல் 12 வரை ஒத்திவைப்பு

சுருக்கம்

புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததையடுத்து பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 

இந்த அறிவிப்பால் பொதுமக்கள் தற்போது வரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

எனவே, இந்த அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினர்  குளிர்கால கூட்ட தொடர் தொடங்கிய நாள் முதல் தொடர் அமளியில் ஈடுட்பட்டு வருகின்றனர்.

எனவே, எதிர்கட்சியினரின் இந்த தொடர் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கியதும் எதிர்கட்சியினர் ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து எதிர்கட்சியினர் நேற்று நாடாளுமன்ற வளாகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனால் மாநிலங்களவையும், மக்களவையும்  பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

தாக்கரேவை தட்டித்தூக்கிய ஷிண்டே.. மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக கூட்டணி மெகா வெற்றி!
டிக்கெட் இல்லன்னு கவலையே வேண்டாம்.. தெற்கு ரயில்வே கொடுத்த பொங்கல் ஸ்பெஷல் கிஃப்ட்!