
பெங்களூருவில் தனியார் பாதுகாப்பு நிறுவனம் வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியை செய்து வருகிறது.
அதன்படி, நேற்று மதியம் 2 மணியளவில் கே.ஜி. ரோட்டில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு அந்த வாகனம் வந்தது. வாகனத்தில் டிரைவர் மற்றும் போலீசார் உடன் வந்தனர்.
அதிகாரி, காவலாளிகள் வாகனத்தை விட்டு இறங்கி வங்கிக்குள் சென்றனர். அப்போது டிரைவர், பணம் இருந்த வாகனத்துடன் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.
வங்கியில் இருந்து வெளியே வந்த அதிகாரி, காவலாளிகள் வாகனமும், டிரைவரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வங்கி பணத்தையே கொள்ளையடித்து சென்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே, பெங்களூரு நகரில் உள்ள அனைத்து போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு, பணத்துடன் தலைமறைவான கார் டிரைவரை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், பெங்களூருவின் வசந்த் நகர் பகுதியில் கடத்தப்பட்ட வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தில் இருந்து 45 லட்சம் ரூபாய் பணத்தையும், துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், மீதி பணம் குறித்தும், தப்பி ஓடிய ஓட்டுனர் குறித்தும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.