“எதிர்கட்சியினர் தொடர் அமளி” – நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

Asianet News Tamil  
Published : Nov 29, 2016, 01:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
“எதிர்கட்சியினர் தொடர் அமளி” – நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

சுருக்கம்

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற குளரிகால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கியுள்ளன.

இந்நிலையில் இன்று மீண்டும் அவை கூடியதும், மக்களவையில் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். மேலும். பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி எதிர்கட்சிகள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று கூச்சலிட்டதால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்கட்சியினர் கோஷ்களை எழுப்பியதால் அவையில் கூச்சல், குழப்பமும் நிலவியது. இதனால் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

45, 25 நாட்கள்.. LPG சிலிண்டர் முன்பதிவில் மெகா சேஞ்ச்..? மே 1 முதல் புதிய விதி அமல்..
Hostel Incident : தோழி சென்ற சில நிமிடங்களில்.. விடுதிக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்