
ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்றும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. விவாதம் ஏதும் நடைபெறாமல் இரு அவைகளும் முடங்கின.
மக்களவையில் பிரதமர் நேரில் வந்து ரூபாய் நோட்டு பிரச்னை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சபாநாயகர் இருக்கை முன்பு கூடி, கோஷமிட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக, அவை அலுவல்கள் ஏதும் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனைத்தொடர்ந்து, மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோன்று, மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், மாநிலங்களவையும் முடங்கியது.