போர் பதற்ற சூழலில் இந்தியரை கரம் பிடித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் !! .. புதுமண தம்பதிக்கு குவியும் பாராட்டு மழை .. .

Published : Aug 21, 2019, 05:28 PM ISTUpdated : Aug 21, 2019, 05:37 PM IST
போர் பதற்ற சூழலில் இந்தியரை கரம் பிடித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் !!  .. புதுமண தம்பதிக்கு குவியும் பாராட்டு மழை .. .

சுருக்கம்

இந்திய பெண் ஒருவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி திருமணம் செய்து கொண்டுள்ளார் . அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துச் செய்தி வந்த வண்ணம் இருக்கிறது .

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி . இவருக்கும் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஷாமியா அர்சூவிற்கும்(26) துபாயில் வைத்து பழக்கம் ஏற்பட்டு  இருக்கிறது . ஷாமியா எமிரேட்ஸ் நிறுவனத்தில் விமான பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது குடும்பத்தினர் டெல்லியில் வசித்து வருகின்றனர்.

இருவருக்குமான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது . இரு வீட்டிலும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டவே திருமண ஏற்பாடுகள் தொடங்கின . அதன்படி இருவருக்கும் திருமணம் நேற்று துபாயில் வைத்து நடைபெற்றது . இந்த திருமணத்திற்கு பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் வீரர்களும் அழைக்கப்பட்டிருந்தனர் . எனினும் இரு நாட்டு வீரர்களும் கலந்து கொள்ளவில்லை .

இந்த புதுமண தம்பதிகளுக்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்த்தி ட்விட் செய்துள்ளார் . மேலும் சமூக வலைத்தளங்களில் இவர்களின் திருமண புகைப் படம் வைரலாகி வருகிறது .

இந்த திருமணம் மூலம்  இந்தியாவைச் சேர்ந்த பெண்ணை மணம் முடிக்கும் 4வது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பை ஹசன் அலி பெற்றுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!