ஆளையே காணோம்... வெளிநாடு தப்பிவிடாதபடி லுக் அவுட் நோட்டீஸு... ஒரே நாள்ல எவ்ளோ மேட்டரு? சிதம்பரத்தை ஓட விட்ட பிளான்...

By sathish kFirst Published Aug 21, 2019, 5:22 PM IST
Highlights

ப.சிதம்பரம் ஆளையே காணோம், வெளிநாடு தப்பிவிடாதபடி சிபிஐயும் அமலாக்க துறையும் லுக் அவுட் நோட்டீஸ் குடுத்துடிச்சி என ஒரே நாளில் எவ்வளவு மேட்டர் நடந்திருக்கு பாருங்க.

சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தின் வீட்டுக்கு அமலாக்கத்துறையினர் வந்தது எனச் சொல்கிறார்கள். மேல்முறையிட்டு மனு விசாரணைக்கு வரும் முன்பே சிதம்பரத்தை கைதுசெய்வது தான் பிளான். இதற்கிடையில், சட்டரீதியான ஆலோசனையில் இறங்கியுள்ளதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, `சிதம்பரம் தலைமறைவு’ என்று நியூஸை கசியவிட்டு, சிதம்பரத்தை தானாக வரவழைத்துவிடலாம் என்று பிளான் தீட்டியிருப்பதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இன்றிரவுக்குள் கைது படலம் இருக்கும் என்கின்றனர்.

மேலும், இது காங்கிரஸ் தரப்பிற்கும், சிதம்பரம் தரப்பிற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிதம்பரம் மீதான  மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து விசாரித்த போது, 2010ம் ஆண்டு உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது அமித்ஷா குஜராத் போலி எண் கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதேபோல் இன்று அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ள நிலையில், முன்னாள் உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் கைது செய்யப்படும் நிலையில் உள்ளார். இது பழி வாங்கப்படும் நடவடிக்கை என்று அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல, அவரை கைது செய்ய போனபோது தலைமறைவு போன்ற தோற்றத்தையும் உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது. முன்ஜாமீன் மனு மட்டுமே தள்ளுபடி ஆனதும் குறிப்படத்தக்கது.

பா. சிதம்பரம் தலைமறைவு குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு பதிவில்... மத்திய நிதியமைச்சராக ஏராளமான பேர் மீது வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு பிறப்பித்தவர். உள்துறை அமைச்சராக இருந்து, கிரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட வர்களை கைது நடவடிக்கைகளை பணித்தவர். மூத்த வழக்கறிஞராக அவர் பல வழக்குகளில் முன் ஜாமீன் மற்றும் ஜாமீன் பெற்றுத்தர காரணமாய இருந்திருப்பார். அவரே பலருக்கு முன் ஜாமீன் தரக்கூடாது என்றும் வாதாடியிருப்பார்.

இன்று அவரே சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள முடியாமல், தனக்காக தற்காப்பு வாய்ப்புகளை அதிகபட்சம் பயன்படுத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். ப.சிதம்பரம் ஒன்றும் சட்டநடவடிக்கைக்கு அப்பாற் பட்ட புண்ணியாத்மா கிடையாது..அவரின் குடும்ப செல்வாக்கு அதிகாரங்களை காட்டி பல சர்ச்சைகளை சந்தித்தன என்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் இல்லை.

அவர் மகன், ஈமெயிலில் அனுப்பிய புகாரில் உடனே சமூக வலைத்தளவாசி ஒருவரை காவல்துறை உள்ளே போட்ட வேகம் மறக்கவே முடியாது.. ப.சிதம்பரத்திற்காக முன் ஜாமீன் நீட்டிப்பு கின்னஸ் சாதனை படைக்கும்போல. நீதித்துறை பெருமை கொள்ளலாம். இன்னொரு வகையில் ப.சிதம்பரம், நீதித்துறை பற்றி யோசிக்க வைத்திருக்கிறார்.

சில நேரங்களில் ஒருவரின் முன்ஜாமீனை தள்ளுபடி செய்யும் உயர் நீதிமன்றம். மேல்முறையீடு செய்துகொள்ள கொடுக்கும் அவகாசத்தை எல்லாருக்கும் கொடுக்குமா? நீதித்துறை வரலாற்றை நன்கு அறிந்தவர்கள் சொன்னால் தேவலை. நான் ஜாமீன் தர முடியாது என்று ஒரு நீதிபதி சட்டத்தின் அடிப்படையில் சொல்கிறவர், மேலேபோய் பார்த் துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார் என்றால், அப்போது மேலே பரிகாரம்கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா?

அந்த பரிகார வாய்ப்பு இந்த நீதிபதிக்கே தெரியும் என்றால் அவர் என் அதை தொட மறுக்கிறார்..பரிகார வாய்ப்பு இல்லை என்று அவரது சட்ட அறிவு தீர்மானிக்குமானால், எதற்கு அவகாகம் போன்ற மேற்கட்ட வாய்ப்பை கொடுக்கவேண்டும்? ஏனெனில் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் நீதிபதிகள் என அனைத்து தரப்பினருக்கும் ஒரே சட்டம்தானே? நீதித்துறை என்றாலே தலைசுத்துது..தலை சுத்தாத அளவுக்கு சட்டங்களை நாமளும் படிக்கணும்டா சாமி என இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

click me!