என் வீட்டை தண்ணீரில் மூழ்கடிக்கப்பார்க்கிறாங்க... சந்திரபாபு நாயுடு பகீர் குற்றச்சாட்டு..!

Published : Aug 21, 2019, 04:36 PM ISTUpdated : Aug 21, 2019, 04:38 PM IST
என் வீட்டை தண்ணீரில் மூழ்கடிக்கப்பார்க்கிறாங்க... சந்திரபாபு நாயுடு பகீர் குற்றச்சாட்டு..!

சுருக்கம்

அணைகளில் தேக்கி வைக்கப்பட்ட நீரை ஒரே நேரத்தில் வெளியேற்றி என் வீட்டை தண்ணீரில் மூழ்கடிக்க முயற்சி செய்கின்றனர் என முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். 

அணைகளில் தேக்கி வைக்கப்பட்ட நீரை ஒரே நேரத்தில் வெளியேற்றி என் வீட்டை தண்ணீரில் மூழ்கடிக்க முயற்சி செய்கின்றனர் என முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.  

ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கியதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆந்திர மாநிலம் உந்தவள்ளியில் அம்மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குடியிருக்கும் வீட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் சந்திரபாபு நாயுடு தற்போது ஐதராபாத்தில் உள்ள வீட்டிற்கு இடம் பெயர்ந்தார். 

இந்நிலையில், விஜயவாடாவில் கிருஷ்ணா நதி வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட கீதா நகர், பூபேஷ் குப்தா நகர், தாரகராமாநகர் ஆகிய
இடங்களை முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  அவர் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு எனது வீட்டை நீரில் மூழ்கடிக்க முயற்சி செய்தனர். ஆனால், எனது வீடு மூழ்கவில்லை.

 

இந்த வெள்ளப்பெருக்கு சாதாரணமாக வந்தது அல்ல. அணைகளில் இருந்து சில நாட்களுக்கு முன்னதாகவே தண்ணீரை வெளியேற்றி இருந்தால் இந்த அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்காது. திட்டமிட்டே என் வீட்டை மூழ்கடிக்க வேண்டும் என அணைகளில் நீரை தேக்கி பின்னர் ஒரே நேரத்தில் வெளியேற்றியுள்ளனர். மேலும், ஒருபுறம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஏழை, எளிய மக்கள் கடும் சிரமத்தை எதிர் கொண்டுள்ள நிலையில் அவர்களை கண்டுகொள்ளாமல் எனது வீட்டையே சுற்றி சுற்றி வந்தபடி அமைச்சர்கள் இருந்தனர் என சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

இடைவெளி விடுங்கள்.. EMI கட்ட வேண்டியுள்ளது.. வைரலாகும் காரின் பின்புறம் ஓட்டப்பட்ட ஸ்டிக்கர்..
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!