இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தான் அதிரடிப் படையினர் ! சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம் !!

Published : Aug 03, 2019, 10:00 PM IST
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற  7  பாகிஸ்தான் அதிரடிப் படையினர்  ! சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம் !!

சுருக்கம்

இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தானிய அதிரடி படையினர் சுட்டு கொல்லப்பட்டனர்.  

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் நகரில் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து அங்கு ராணுவ வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.

காஷ்மீருக்குள் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரின் சகோதரன் உள்பட 15 பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளனர் என்றும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தினருக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.  இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே, இந்திய எல்லைக்குள் கெரான் பிரிவில் ஊடுருவும் முயற்சியாக பாகிஸ்தானிய அதிரடி படையினர் ஈடுபட்டனர்.  அவர்களை இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து தடுத்தது.  தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில், கடந்த 36 மணிநேரத்தில் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தானிய ராணுவ பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.  அவர்களின் உடல்கள் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கிடக்கின்றன.  தொடர்ந்து கடும் மோதலால் அவர்களின் உடல்களை கைப்பற்ற முடியவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.

PREV
click me!

Recommended Stories

இன்சூரன்ஸ் துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றம்!
அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கும் SHANTI மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!