பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்... நாசவேலைகளில் ஈடுபட ஆவேசம்... உளவுத்துறை கடும் எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Sep 5, 2019, 5:24 PM IST
Highlights

பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு -காஷ்மீரில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. 

பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு -காஷ்மீரில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. 

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அம்மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது இந்திய அரசு. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் பிரச்சினையைத் தூண்டுவதற்கான பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு- காஷ்மீரில் ஐஎஸ்ஐ பயங்கரவாதிகளை பெருமளவில் ஊடுருவ வைக்க திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்திய புலனாய்வு அமைப்புகளின் மதிப்பீட்டு அறிக்கையின்படி, அதிக பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை நாட்டிற்குள் தள்ளுவதற்காக பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ ஆகியவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மூன்று புதிய பயங்கரவாத முகாம்களை அமைத்துள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் 18 பயங்கரவாத முகாம்கள் மற்றும் ஏவுதளங்களை இந்திய புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளது. அங்கு பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று, ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளனர். 

கோட்லி பகுதியில், குல்பூர், சேசா, பாராலி, துங்கி மற்றும் கோட்லி ஆகிய இடங்களில் பயங்கரவாத முகாம்கள் மற்றும் ஏவுதளங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஏ-3 செக்டார், காளி காதி மற்றும் ஹசீரில் பயங்கரவாத முகாம்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, பஹவல்பூர், பும்பா மற்றும் பர்னாலாவில் புதிய முகாம்கள் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!