சர்ச்சை சாமியார் ஜக்கி, சோ ராமசாமிக்கு பத்ம விருது - குடியரசு தலைவர் வழங்கினார்

 
Published : Apr 13, 2017, 02:32 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
சர்ச்சை சாமியார் ஜக்கி, சோ ராமசாமிக்கு பத்ம விருது - குடியரசு தலைவர் வழங்கினார்

சுருக்கம்

padma awards for jaggi cho ramaswamy

ஜக்கி வாசுதேவ், பாடகர் கே.ஜே.யேசுதாஸ், பத்திரிகையாளர் சோ ராமசாமியின் மனைவி ஆகியோருக்கு பத்ம விருதுகள் இன்று வழங்கப்பட்டது.

இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருது இன்று டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்டது. இதில் சினிமா, விளையாட்டு உள்பட அனைத்து கலைத் துறையினருக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்கி பாராட்டினார்.

இதில் தலா 7 பத்ம விபூஷன், பத்ம பூஷன், 75 பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

பத்திரிகையாளர் சோ ராமசாமியின் மனைவி, பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ், சர்ச்சை சாமியார் ஜக்கிவாசுதேவ், செயற்கைக்கோள் விஞ்ஞானி உடுப்பி ராமச்சந்திர ராவ் உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன.

தடகள வீரர் மாரியப்பன், மிருதங்க கலைஞர் டி.கே.மூர்த்தி, பிரான்ஸ் நாட்டில் பிறந்து தமிழகத்தில் இலக்கிய பணியாற்றும் மிஷெல் டேனினோ, சமூக சேவகர் நிவேதிதா ரகுநாத், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ் உள்பட 75 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

இரவு விருந்து.. ரூமில் நண்பர்களுடன் கும்மாளம் போட்ட இளம்பெண்.. உள்ளே புகுந்த போலீஸ்.. அடுத்து நடந்த அதிர்ச்சி
இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!