பெண்ணின் உடலமைப்பு “36-24-36” இப்படி இருக்கணும்… - சிபிஎஸ்இ பாடத்தால் வெடித்தது சர்ச்சை

 
Published : Apr 13, 2017, 10:54 AM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
பெண்ணின் உடலமைப்பு “36-24-36” இப்படி இருக்கணும்… - சிபிஎஸ்இ பாடத்தால் வெடித்தது சர்ச்சை

சுருக்கம்

cbse syllabus about girls body structure

ஒரு பெண்ணின் கவர்ச்சியான உடலமைப்பு என்பது “36-24-36” அளவுகளில் இருக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் உடல்கல்வி பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயம் பாட பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு மகளிர் அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் 12ம் வகுப்பு உடற்கல்வி பாடத்தை டாக்டர் வி.கே. சர்மா என்பவர் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், “ கவர்ச்சியான பெண்களின் உடல் அமைப்பு என்பது “36-24-36” என்ற அளவுகளில் இருக்க வேண்டும்.

 இடைமெலிந்து இருக்கும் பெண்கள் தான் கட்டுஉடல் கொண்ட, அழகானவர்கள். உலக அழகி, பிரபஞ்ச அழகிப்போட்டியில் “ஹவர் கிளாஸ்” எனப்படும் இடைமெலிந்து, மார்பும், இடுப்புக்கு கீழ்பகுதி பெரிதாக தோற்றமளிக்கும் பெண்கள்தான் வெற்றி பெறுகிறார்கள்” என்று எழுதியுள்ளார்.

இதை நியூ சரஸ்வதி ஹவுஸ் என்ற பதிப்பகம் அச்சடித்துள்ளது. அதேபோல ஆண்கள் குறித்து கூறுகையில், ஆங்கிலத்தில் “V” போன்ற தோற்றமளித்தால் அது கட்டுடல் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பாடங்களைக் பார்த்த பெற்றோர்களும், மகளிர் அமைப்புகளும் கொதித்து சி.பி.எஸ்.இ. அமைப்பிடம் பெண்கள் குறித்து மிகவும் கண்டிக்கதக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது என்று புகார் செய்தனர். உடனடியாக அந்த பாடங்களை நீக்க வேண்டும் எனக் கோரிக்கையும் வைத்தனர்.

இதையடுத்து, டாக்டர் வி.கே. சர்மா என்பவர் எழுதிய அந்த உடல்கல்வி புத்தகத்தை யாரும் பள்ளிகளில் விற்பனை செய்யக்கூடாது, இனி புதிதாக அச்சுப்பதிக்கவும் கூடாது, வழங்கவும் கூடாது என சி.பி.எஸ்.சி. அந்த பதிப்பகத்தாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து நியூ சரஸ்வதி ஹவுஸ் பதிப்பகம் விடுத்த அறிக்கையில், “ இதுபோன்ற வார்த்தைகளை திருத்த வேண்டியது எங்கள் கடமை. அதை முழுமையாக சரி செய்து எங்கள் ஆசிரியர் குழு ஆய்வுக்கு பின், விரைவில் புதிய புத்தகங்கள் வெளியிடுவோம்” என்று தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து சி.பி.எஸ்.இ. வாரியத்தின் செய்தித்தொடர்பாளர் ராமா சர்மா கூறுகையில், “ நாங்கள் இதுபோன்ற புத்தகங்களையும்,தனிப்பட்ட பதிப்பகத்தார் வெளியிடும் புத்தகங்களையும் பரிந்துரை செய்வதில்லை,சில தனியார் பள்ளிகள் இதை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

சாதி, சமூகம், மதம், பாலினம் பற்றி புண்படுத்தும் விதமாக எந்த கருத்தும் பாடப்புத்தகத்தில் இடம்பெறக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே இதுபோன்ற புத்தகங்களை பாடத் திட்டத்தில் சேர்க்கும்போது, பள்ளிகள்தான் அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும் “ எனத் தெரிவித்தார்

இதற்கிடையே, சி.பி.எஸ்.இ. பள்ளியின் முதல்வர் ஒருவர் கூறுகையில், “ உடல்கல்வி பாடத்தில் பெண்கள் குறித்து கூறப்பட்டுள்ள வார்த்தைகள் மிகவும் வன்மையானது. உடல் அமைப்பு குறித்து மிகவும் கொச்சையாக குறிப்பிடப்பட்டுள்ளது. வயது வந்த மாணவிகள் மத்தியில்இதை பாடமாக நடத்தும் போது, ஆசிரியர்கள், மாணவிகளுக்கும் தர்மசங்கடமான சூழல் நிலவியது” என்றார். 

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்! வாரணாசியில் தொங்கிவைத்த மத்திய அமைச்சர்!