வீடு தேடி வரும் ரயில்வே டிக்கெட்…. 'கேஷ் ஆன் டெலிவரி' முறை அறிமுகம்….

 
Published : Apr 13, 2017, 08:04 AM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
வீடு தேடி வரும் ரயில்வே டிக்கெட்…. 'கேஷ் ஆன் டெலிவரி' முறை அறிமுகம்….

சுருக்கம்

cash on delivery

வீடு தேடி வரும் ரயில்வே டிக்கெட்…. 'கேஷ் ஆன் டெலிவரி' முறை அறிமுகம்….

இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, வீட்டிற்கே வந்து, நேரில் டிக்கெட்டை தந்து, கட்டணம் பெறும் வசதியை, ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது.

ரயில்களில் பயணிகள் வருகையை அதிகரிக்க, பல புதிய திட்டங்களை, இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி வருகிறது. இவற்றை, ஐ.ஆர்.சி.டி.சி., அமல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளத்தில், ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. 



டிக்கெட்டிற்கான கட்டணத்தையும், அதன் வாயிலாக செலுத்துத வசதி செய்யப்பட்டது. இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்த விபரங்கள், பயணியின் மொபைல் எண்ணிற்கு, குறுஞ்செய்தி மற்றும் இ - மெயில் மூலம் தெரிவிக்கப்படுவதால், காகித பயன்பாடு வெகுவாக குறைந்தது.

இந்நிலையில் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு இல்லாதவர்களுக்காக, இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்களின் வீட்டிற்கு வந்து, டிக்கெட்டை கொடுத்துவிட்டு அதற்கான கட்டணத்தை பெற்றுச் செல்லும், 'கேஷ் ஆன் டெலிவரி' முறையை, நாடு முழுவதும், 600 நகரங்களில், ஐ.ஆர்.சி.டி.சி., துவங்கியுள்ளது.

இந்த வசதியை பயன்படுத்த விரும்புவோர், ஆதார் அட்டை மற்றும், 'பான்' அட்டை வைத்திருக்க வேண்டும். 


ஐ.ஆர்.சி.டி.சி., தளத்தில், பணம் செலுத்தும் முறையை தேர்வு செய்யும் போது, சி.ஓ.டி., எனப்படும், 'கேஷ் ஆன் டெலிவரி'யை தேர்வு செய்ய வேண்டும்.பயண நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன், டிக்கெட் முன்பதிவு செய்கையில், இந்த வசதியை பயன்படுத்த முடியும். இவ்வாறு முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யும் போது, அதற்கான பணம், பயணியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால், வங்கிக் கணக்கு குறித்த தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.

 

 

PREV
click me!

Recommended Stories

நாடாளுமன்றத்தில் ஹாயாக சிகரெட் பிடித்த திரிணாமுல் காங். எம்.பி.! மம்தாவை கதறவிடும் பாஜக!
50% ஊழியர்களுக்கு Work From Home கட்டாயம்! ரூ.10,000 இழப்பீடு டெல்லியில் அரசு அதிரடி அறிவுப்பு!