
புதுச்ேசரி துணை நிலை ஆளுநர் மாளிகையை பார்க்க வந்த சிறுவனை அழைத்து அவனின் அசையான தனது இருக்கையில் அமரவைத்து ஆளுநர் கிரண் பேடியின் அனுப்பினார்.
புதுச்சேசரி துணை நிலை ஆளுநராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி இருந்து வருகிறார். இவரை நாள்தோறும் சந்தித்து மக்கள் மனுக்கள் அளிப்பார்கள். அவரும் மக்களிடம் குறைகளைக் கேட்டு அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
இந்நிலையில், புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு நேற்று ஒரு சிறுவன் தனது பெற்றோர்களுடன் வந்து இருந்தான். அவனின் பெற்றோர்களிடம் மனுவைப் பெற்ற ஆளுநர் கிரண்பேடி, அந்த சிறுவனிடம் பேசத் தொடங்கினார். அவனின் படிப்பு, கல்வி ஆகியவை குறித்து விசாரித்த கிரண்பேடி, உனது ஆசை என்ன என்று கேட்டார். அந்த சிறுவன் ஆளுநரான உங்கள் இருக்கையில் அமர வேண்டும் என்றான்.
இதையடுத்து, அந்த சிறுவனை அழைத்துச் சென்ற, கிரண்பேடி, தனது அலுவலகத்தில் உள்ள தனது இருக்கையில் அமரவைத்து அவனின் ஆசையை நிறைவேற்றினார்.
இது குறித்து கிரண் பேடி டுவிட்டரில் ெவளியிட்ட பதிவில், “இந்த ஆளுநர் மாளிக்கைக்கு வரும் குழந்தைகளை அழைத்து தனது இருக்கையில் அமரவைக்கிறேன். இதன் மூலம் அவர்களின் ஆசையைத் தூண்டி, அவர்களையும் ஒருநாள் ஆளுநராகலாமே. யாருக்கு தெரியும்?’’ எனத் தெரிவித்துள்ளார்.