
கோவா தலைநகர் பனாஜியில், மகாராஷ்டிரா வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம்-ன் சில மீட்டர் தொலைவில் காவல் நிலையம் உள்ளது. ஏ.டி.எம்.-ல் காவலுக்காக பாதுகாப்பு பணியில் காவலர் ஒருவர் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், நேற்று மர்ம நபர் ஒருவர், ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். இதனைப் பார்த்த பாதுகாவலர், மர்ம நபரை பிடிக்க முயன்றார். ஆனால் அந்த மர்ம நபரோ, தான் கையில் வைத்திருந்த சுத்தியலைக் கொண்டு பாதுகாவலை கடுமையாக தாக்கினார்.
தான் தாக்கப்பட்ட நிலையிலும், பாதுகாவலர், அந்த மர்ம நபரை பிடிக்க முயன்றார். ஆனாலும் அவர் தப்பியோடிவிட்டார். இதனால் கொள்ளைச் சம்பவம் தடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி தற்போது வலைதளத்தில் வெகுவாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, போலீசாரிடம் புகார் செய்யப்பட்டதை அடுத்து, இரண்டுபேர் மீது வழக்கு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.