பணவீக்கம் உயர்வு, விலைவாசி அதிகரிப்பு, சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைமுன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணவீக்கம் உயர்வு, விலைவாசி அதிகரிப்பு, சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைமுன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது, மேலும், மறைந்த எம்.பி.க்கள் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் விலைவாசி உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு, பணவீக்கம் ஆகியவை குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் 2வது நாளான இன்று நாடாளுமன்றத்துக்கு வந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், விலைவாசி உயர்வு, சிலிண்டர் விலை அதிகரிப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன் எதிர்க்கட்சிகள் பதாகைகளுடன் விலைவாசி உயர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். உயர்ந்த பணவீக்கம், தொடரந்து உயரும் விலைவாசியால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று பதாகைகளை ஏந்தி ராகுல்காந்தி கோஷமிட்டார்
महँगाई के खिलाफ संसद परिसर में श्री जी के नेतृत्व में विपक्षी सांसदों का हल्ला बोल,
तानाशाह कितना भी कोशिस करे इन आवाजों को दबाने की, जनता के हकों के खातिर हम सड़क से लेकर संसद तक संघर्ष जारी रखेंगे। pic.twitter.com/lIKmOf11qY
நாடாளுமன்றக்கூட்டத் தொடங்கும் முன்பு பேசிய பிரதமர் மோடி, “ அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒத்துழைப்பு தந்து, அவையை சமூகமாக நடத்திட உதவ வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆரோக்கியமான விவாதங்களை அவையில் நடத்தலாம், தேவைப்பட்டால் விமர்சிக்கலாம், நல்லவிதமான ஆய்வுகள் கொள்கைகளை சிறப்பாகவடிவமைக்க துணை புரியும்” எனத் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில் “விலைவாசி உயர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். காந்திசிலை முன்பு மட்டுமல்ல அவைக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் தொடரும், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிராகப் போராடுவோம்” எனத் தெரிவித்திருந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பினாய் விஸ்வம் கூறுகையில் “ ஜிஎஸ்டி வரி உயர்வு ஒட்டுமொத்த மக்கள் விரோதமானது. இதற்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம்”எனத் தெரிவித்தார்.