எதிர்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் இவரா? - காங்கிரஸ் முடிவு!!

First Published Jun 20, 2017, 11:22 AM IST
Highlights
opposite candidate for president election


இந்திய ஜனதிபதி தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளரை தேர்வு செய்திவதில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் கடந்த சில நாட்களாக நடத்தி வந்தனர்.

ஜனாதிபதி தேர்தலில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என அனைத்து கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர். இதையொட்டி தலித் பிரிவை சேர்ந்த ஒருவரை வேட்பாளாராக அறிவிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிரம் காட்டியது.

இதைதொடர்ந்து பாஜகவினர் அனைத்து மாநில முதல்வர்களையும் சந்தித்து, தங்களது ஆதரவு வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி கேட்டு கொண்டனர். இதேபோல் காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சி தலைவர்களான மாயாதேவி, லாலு பிரசாத், மம்தா பானர்ஜி, டி.ராஜா உள்பட பலரையும் சந்தித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதையொட்டி பாஜக சார்பில் பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தீவிரமானது.

மேலும், ஜனாதிபதி தேர்தலில் ஒரு மித்த கருத்து ஏற்படுத்துவதாக கூறிவிட்டு பாஜக தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளதாக காங்கிரஸ் உள்பட அனைத்துஎதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அல்லது லோக்சபா சபாநாயகர் மீராகுமார் ஆகியோர்ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக சுஷில்குமார் ஷிண்டே கூறுகையில், அதுபோன்றொரு தகவல் ஏதும்தனக்கு வரவில்லை என்றார். 

click me!