
Operation Sindoor : பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 6-7 இரவு 01:13 மணியளவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கான நாள் மற்றும் நேரத்தை இந்திய ராணுவம் ஏன் தேர்ந்தெடுத்தது என்பது குறித்து ஜோதிடர் பண்டிட் நளின் சர்மா விளக்குகிறார்.
ஜோதிடர் பண்டிட் நளின் சர்மா கூறுகையில், மே 6-7 இரவு வைகாசி மாத சுக்கில பட்ச தசமி திதி. ஜோதிட சாஸ்திரத்தின்படி, தசமி திதியின் அதிபதி எமன். இந்தத் திதி, சர்ச்சைகளில் வெற்றி பெறுவதற்கு மிகவும் நல்லது. இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நேரம், இரவு 01:13 மணி. இந்த நேரத்தில் வியாகாத யோகம் இருந்தது. வியாகாத என்றால் மறைந்திருந்து தாக்குவது என்று பொருள். வியாகாத யோகத்தில் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தினால் வெற்றி நிச்சயம்.
இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நேரத்தில் சந்திரன் சிம்ம ராசியில் இருந்தார். சிம்ம ராசி மிகவும் வலிமையான ராசி. அதன் அதிபதி சூரியன். இந்த நிலையும் இந்திய ராணுவத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
செவ்வாய் - புதன் இரவில் தாக்குதல் நடத்தப்பட்டது. செவ்வாயின் அதிபதி செவ்வாய் பகவான். அவர் போருக்குத் தயாராக இருப்பவர். புதன்கிழமை தொடங்கும் போரில் எதிரிக்குப் பொருளாதார இழப்பு ஏற்படும், வெற்றியும் கிடைக்கும். எனவே, வார நாளும் இந்தத் தாக்குதலுக்குச் சாதகமாக இருந்தது.
Disclaimer
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் ஜோதிடர்களால் கூறப்பட்டவை. நாங்கள் இந்தத் தகவல்களை உங்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு ஊடகம் மட்டுமே. இந்தத் தகவல்களை வெறும் தகவல்களாக மட்டுமே கருதுங்கள்.