ஆபரேஷன் சிந்தூர்: தேசிய பாதுகாப்பில் இந்தியாவின் தன்னிறைவு

Published : May 14, 2025, 09:19 PM IST
Operation Sindoor. (Photo/X@agdpi)

சுருக்கம்

ஏப்ரல் 2025 இல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தின் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்ப பயன்பாடு பாகிஸ்தானின் பதிலடி முயற்சிகளை முறியடித்தது.

ஏப்ரல் 2025 இல் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தின் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவின் பதிலடி திட்டமிட்டதாகவும், துல்லியமானதாகவும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருந்தது. கட்டுப்பாட்டு எல்லை அல்லது சர்வதேச எல்லையை மீறாமல், இந்தியப் படைகள் பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்தன. 

இந்த நடவடிக்கையில் தேசிய பாதுகாப்புக்கான உள்நாட்டு அதிநவீன அமைப்புகளின் ஒருங்கிணைப்பு தனித்து நின்றது. ட்ரோன் தாக்குதல், பல அடுக்கு வான் பாதுகாப்பு, மின்னணு போர்முறை என அனைத்து வகையிலும் இந்தியா சிறந்து விளங்கியது. இது ராணுவ நடவடிக்கைகளில் தொழில்நுட்பத் தன்னிறைவை நோக்கிய பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

இந்திய ராணுவத்தின் துல்லியமான தாக்குதல்கள்:

பாகிஸ்தானின் பதிலடி முயற்சிகள் முறியடிப்பு இந்தியாவின் ஆரம்பத் தாக்குதல்களைத் தொடர்ந்து, 2025 மே 7-8 தேதிகளின் இரவில், பாகிஸ்தான் வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அம்ரித்சர், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, அடம்பூர், பட்டிண்டா, சண்டிகர், நல், ஃபலோடி, உத்தரலை மற்றும் புஜ் உள்ளிட்ட பல இராணுவ இலக்குகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தித் தாக்க முயன்றது. ஆனால், Counter UAS வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் இவை அனைத்தும் தடுத்து அழிக்கப்பட்டன.

பின்னர், மே 8 ஆம் தேதி காலை, இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தானில் உள்ள பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளை குறிவைத்துத் தாக்கின. இந்தத் தாக்குதலில் லாகூரில் இருந்த வான் பாதுகாப்பு அமைப்பு ஒன்று செயலிழந்தது.

உள்நாட்டு அமைப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு:

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நிரூபிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளான பெச்சோரா, ஓசா-ஏகே மற்றும் எல்எல்ஏடி துப்பாக்கிகள் மற்றும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆகாஷ் போன்ற அமைப்புகளும் பயன்படுத்தப்பட்டன. இதில் ஆகாஷ் அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தியது. தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை பாதுகாப்பு அமைப்புகள் மிகச்சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்பட்டன. இந்த அமைப்புகள், ஒருங்கிணைக்கப்பட்ட வான் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் (IACCS) கீழ் செயல்பட்டு, ஒரு வலுவான மற்றும் ஊடுருவ முடியாத பாதுகாப்பு அரணை உருவாக்கி, பாகிஸ்தானின் பல பதிலடி முயற்சிகளை முறியடித்தன.

துல்லியமான தாக்குதல்கள் மற்றும் தொழில்நுட்ப மேலாதிக்கம் இந்தியாவின் தாக்குதல் நடவடிக்கைகளில் நூர் கான் மற்றும் ரஹிம்யார் கான் போன்ற முக்கிய பாகிஸ்தான் விமான தளங்கள் துல்லியமாக குறிவைக்கப்பட்டன. இந்தியாவின் ஏவுகணைகள் இலக்குகளைச் சரியாகத் தாக்கி பேரழிவை ஏற்படுத்தின. பாகிஸ்தான் ரேடார் மற்றும் ஏவுகணை அமைப்புகளைக் கண்டுபிடித்து அழித்தன. இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் இந்தியாவின் சொத்துகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட்டன. இது இந்தியாவின் கண்காணிப்பு, திட்டமிடல் மற்றும் மேம்பட்ட உள்நாட்டு தொழில்நுட்பங்களின் திறனைக் காட்டுகிறது. குறிப்பாக, இந்திய விமானப்படை பாகிஸ்தானின் சீனாவால் வழங்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாக்கி, அவற்றைச் செயலிழக்கச் செய்தது. குறுகிய காலத்தில் இந்தப் பணிகளை முடித்து, இந்தியாவின் தொழில்நுட்ப மேன்மையை நிரூபித்தது.

பாகிஸ்தான் பயன்படுத்திய வெளிநாட்டு ஆயுதங்கள்:

சீனாவில் தயாரிக்கப்பட்ட பிஎல்-15 ஏவுகணைகள் மற்றும் துருக்கியில் தயாரிக்கப்பட்ட "Yiha" யுஏவிகள் எதிரிகளால் பயன்படுத்தப்பட்டன என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைத்தன. தகர்க்கப்பட்ட நீண்ட தூர ராக்கெட்டுகள் மற்றும் பல்வேறு ட்ரோன்களின் பாகங்களும் கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தான் வெளிநாட்டு ஆயுதங்களை நம்பியிருந்த நிலையில், இந்தியா உள்நாட்டிலே உருவாக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றைச் சுலபமாக முறியடித்தன.

பதிலடியை எதிர்பார்த்து திட்டமிட்டிருந்த இந்தியா ராணுவம் வான் பாதுகாப்பு ஆயுதங்களை ஒருங்கிணைத்து ஒரு தனித்துவமான பல அடுக்கு பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியிருந்தது. இந்த அமைப்பு இந்திய விமானப்படை தளங்கள் மற்றும் தளவாட கிடங்குகள் மீதான தாக்குதல்கள் முயற்சிகளைத் திறமாகத் தடுத்தது.

இஸ்ரோ மற்றும் ட்ரோன் தொழில்துறையின் பங்களிப்பு:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தேசிய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்தது பத்து செயற்கைக்கோள்கள் இந்தியாவின் எல்லைகள் மற்றும் கடற்கரைப் பகுதிகள் முழுவதும் கண்காணிப்பை தொடர்ந்து வழங்கி வருகின்றன. 550க்கும் மேற்பட்ட ட்ரோன் நிறுவனங்கள் மற்றும் 5500 ட்ரோன் விமானிகள் அடங்கிய ட்ரோன் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (DFI) ஆகியவை உள்நாட்டிலேயே ட்ரோன் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை ஊக்குவித்து வருகின்றன.

ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ், பாராஸ் டிஃபென்ஸ் & ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் மற்றும் ஐஜி ட்ரோன்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்தத் துறையில் முக்கிய பங்களிப்பாளர்களாக உள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட ட்ரோன்களுக்கு தடை மற்றும் PLI திட்டம் போன்ற அரசாங்க முயற்சிகள் இவர்களுக்கு உறுதுணையாக உள்ளன. இதன் மூலம் இந்தியா ஒரு உலகளாவிய ட்ரோன் மையமாக வேகமாக வளர்ந்து வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!