அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்.. மாநில அரசு திடீரென கிடுக்கிப்பிடி உத்தரவு..!

Published : Feb 05, 2022, 06:52 AM IST
அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்.. மாநில அரசு திடீரென கிடுக்கிப்பிடி உத்தரவு..!

சுருக்கம்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. இதனால் அவர்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொள்ள வசதியாக இருந்தது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 14 நாட்கள் சிறப்பு விடுமுறையை 7 நாட்களாக குறைத்து மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக நவீன் பட்நாயக் இருந்து வருகிறார். இந்த மாநிலத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. இதனால் அவர்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொள்ள வசதியாக இருந்தது.

இந்நிலையில், ஒடிசா மாநில பொது நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறை, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்குவதற்கான மாற்றியமைத்துள்ளது. 

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 14 நாட்கள் சிறப்பு விடுமுறை, 7 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. 7 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், மருத்துவ சான்றிதழை காண்பித்தால் விடுமுறை நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!