இனி ஒரு ரூபாய்க்கு மெடிக்கல் டிரீட்மென்ட் எடுத்துக்கொள்ளலாம் !! ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு !!!

Asianet News Tamil  
Published : Aug 15, 2017, 07:10 AM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
இனி ஒரு ரூபாய்க்கு மெடிக்கல் டிரீட்மென்ட் எடுத்துக்கொள்ளலாம் !! ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு !!!

சுருக்கம்

one rupee clinic in railway stations

பயணிகளின் நலன் கருதி ரயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில் ஒரு ரூபாய் கிளினிக் அமைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படும் பட்சத்தில் பயணிகள் நலன் கருதி, ரெயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில் ஒரு ரூபாய் கிளினிக் தொடங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

முதல்கட்டமாக, கிழக்கு ரெயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 10 ரெயில் நிலையங்களில் இம்மாத இறுதிக்குள் இந்த கிளினிக்குகள் தொடங்கப்படுகிறது.

இந்த கிளினிக்குகளில் , டாக்டரின் கட்டணமாக ரூ.1 மட்டுமே வசூலிக்கப்படும். ரத்த அழுத்த பரிசோதனை இலவசமாக செய்வதுடன், சர்க்கரை பரிசோதனைக்கு ரூ.25 வசூலிக்கப்படும். இ.சி.ஜி. ரூ.50-ல் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மேற்கு ரெயில்வேயின் கீழ் செயல்படும் 24 ரெயில் நிலையங்களிலும், பின்னர் இத்திட்டம் நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களில் தொடங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

 

 

 

PREV
click me!

Recommended Stories

கல்யாணம் பண்ணாலும் உன்னை என்னால் மறக்க முடியல.. லாட்ஜில் ரூம் போட்ட ஜோடிகள்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!