விவசாய உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

By karthikeyan VFirst Published May 15, 2020, 4:38 PM IST
Highlights

விவசாய உட்கட்டமைப்புகளை மேம்படுத்த, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், ரூ..1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சுயசார்பு பாரதம் திட்டத்திற்கு ரூ.20 லட்சம் கோடியை ஒதுக்கியிருப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதுதொடர்பான மூன்றாம் கட்ட அறிவிப்பை இன்று வெளியிட்டுவருகிறார்.

முதல்கட்ட அறிவிப்பில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், நிதி மற்றும் மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். நேற்று இரண்டாம் கட்ட அறிவிப்பில், சிறு விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், நடைபாதை வியாபாரிகளின் நலனுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். 

இந்நிலையில், இன்று சுயசார்பு பாரதம் திட்டத்தின் மூன்றாம் கட்ட அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுவருகிறார். இன்று விவசாயம், பால்வளம், மீன்வளம் சார்ந்த துறைகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. 

விவசாயத்திற்கான அறிவிப்புகள்:

விவசாய உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய விளைபொருட்கள் கொள்முதல் நிலையங்கள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் ஆகியவற்றின் உட்கட்டமைப்பை மேம்படுத்த இந்த ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

குறு உணவு உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. இதன்மூலம் 2 லட்சம் குறு உணவு உற்பத்தி நிறுவனங்கள் பயன்பெறும்.
 

click me!