காவலர்களின் அத்துமீறல்... வீடியோ வெளியிட்ட எம்.எல்.ஏ. - என்ன கூறி இருக்கிறார் தெரியுமா?

By Kevin KaarkiFirst Published Jun 12, 2022, 12:48 PM IST
Highlights

காவல துறை அதிகாரிகள் கண்மூடித் தனமாக தாக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதோடு, போலீஸ் அடக்குமுறைக்கு சான்றாக உள்ளது.

காவல் நிலையம் போன்றே காட்சி அளிக்கும் அறை ஒன்றில் ஒன்பது பேர் இரு காவலர்கள் இடம் தங்களை தாக்க வேண்டாம் என கூறி மன்றாடும் காட்சிகள் அடங்கி வீடியோ வெளியாகி உள்ளது. 

இந்த வீடியோவை உத்திர பிரதேச மாநிலத்தின் பா.க.க. சட்டமன்ற உறுப்பினர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் பதிவிட்டு இருக்கிறார். வீடியோவை பதிவிட்டு, தலைப்பில், போராட்டக்காரர்களுக்கு பதில் பரிசு என கூறும் "return gift for rioters" குறிப்பிட்டு உள்ளார். காவல துறை அதிகாரிகள் கண்மூடித் தனமாக தாக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதோடு, போலீஸ் அடக்குமுறைக்கு சான்றாக உள்ளது என எதிர்கட்சிகள் கூறி வருகின்றனர். 

ஊடக ஆலோசகர்:

சட்டமன்ற உறுப்பினர் ஷலாப் மணி திரிபாதி உத்திர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு ஊடக ஆலோசகராக இருந்து வந்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ, எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. 

இது குறித்து வெளியாகி இருக்கும் மற்ற தகவல்களின் படி, இந்த வீடியோ இரண்டு நாட்களுக்கு முன் ஷாரான்புர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் படமாக்கப்பட்டது என கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக் கிழமை தொழுகை நிறைவு பெற்ற பின் முகமது நபிகள் குறித்த சர்ச்சைக் கருத்துக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையை அடுத்து, இந்த வீடியோ படமாக்கப்பட்டது என தெரிகிறது. 

இது போன்ற சம்பவங்கள் நீதித் துறை மீது மக்கள் வைத்து இருக்கும் நம்பிக்கையை கெடுத்து விடும் என உத்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி இருக்கிறார். 

அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு:

“இது போன்ற காவல் நிலையங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட வேண்டும்... லாக் அப் மரணங்களில் உத்திர பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மனித உரிமை மீறல்கள் மற்றும் தலித்களுக்கு எதிரான அத்துமீறல் சம்பவங்களில் உத்திர பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது,” என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார். 

வெள்ளிக் கிழமை அன்று நடத்தப்பட்ட போராட்டம் மற்றும் அதன் ஏற்பட்ட வன்முறையில் தொடர்புடையதாக இதுவரை சுமார் 300-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். 

click me!