ஜூன் 25 ஆம் தேதி ஆஜராக கோரி நுபுல் ஷர்மாவுக்கு மும்பை போலீஸ் சம்மன்...!

By Kevin KaarkiFirst Published Jun 12, 2022, 8:54 AM IST
Highlights

ராசா அகாடமி சார்பில் நுபுர் ஷர்மாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

இடைநீக்கம் செய்யப்பட்ட பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா மும்பை பைதோனி காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் கொடுக்கப்பட்டு இருப்பதாக மும்பை காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

அதன்படி ஜூன் 25 ஆம் தேதி மும்பையில் உள்ள பைதோனி காவல் நிலையத்தில் ஆஜராக நுபுர் ஷர்மாவுக்கு சம்மன் கொடுக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ராசா அகாடமி சார்பில் நுபுர் ஷர்மாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

சர்ச்சைக் குரிய கருத்து:

ஜூன் 25 ஆம் தேதி நுபுர் ஷர்மாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவரது கருத்துக்கள் பதிவு செய்யப்பட உள்ளன. முகமது நபிகள் குறித்து நுபுர் ஷர்மா கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி நாடு முழுக்க போராட்டங்கள் வலுத்துள்ளன. மேலும் பல்வேறு நாடுகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டன. 

தொலைகாட்சி நிகழ்ச்சியின் போது முகமது நபிகள் குறித்து நுபுர் ஷர்மா சர்ச்சைக்கு உரிய கருத்துக்களை தெரிவித்தார். இது தொடர்பாக கடந்த வாரம் நுபுல் ஷர்மாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைகாட்சி நிர்வாகத்திடம் நிகழ்ச்சியின் வீடியோவை வழங்க காவல் துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த சில நாட்களாக மலேசியா, குவைத் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் பா.ஜ.க. தலைவர்களின் கருத்துக்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தது. நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிந்தால் ஆகியோர் முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்ததால், கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், நுபுல் ஷர்மா மற்றும் நவீன் ஜிந்தால் ஆகியோர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

வன்முறை:

நுபுர் ஷர்மா கூறிய கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட போராட்டங்களின் போது, வன்முறை வெடித்தது. வன்முறையில் உயிரிழப்பு மற்றும் பலருக்கு படு காயம் அடைந்தனர். வன்முறை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

click me!