தெருநாய்களால் தாக்கப்பட்ட சம்பவங்களின் வீடியோக்களை சமீபகாலமாக அடிக்கடி பார்க்க முடிகிறது. இவை பொதுமக்கள் மத்தியில் தெருநாய்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துகின்றன.
காஜியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழந்தையை தெருநாய்கள் கூட்டமாக சுற்றி வளைத்துத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ராஜ் நகர் விரிவாக்கப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்பார்ட்மெண்ட் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த கோர சம்பவத்தின் வீடியோ பதிவாகியுள்ளது.
நாய்கள் துரத்தியதால் ஓடிவந்த குழந்தை தடுமாறி தரையில் விழுந்து கிடைக்கும் நிலையில், நாய்கள் சூழ்ந்து குழந்தையை தாக்கி இழுத்துச் செல்லும் காட்சி வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அப்போது அப்பகுதியில் நின்றிருந்த ஒருவர் ஓடிவந்து தெருநாய்களின் பிடியில் இருந்து குழந்தையை விடுவித்தது தூக்கிச் செல்வதையும் வீடியோவில் காணமுடிகிறது.
இது என்ன நீதிமன்றமா ரயில்வே பிளாட்பார்மா? வழக்கறிஞருக்கு செமத்தியா டோஸ் கொடுத்த நீதிபதி சந்திரசூட்!
Horror Unfolds in Ghaziabad Highrise as Attack, Drag Toddler in Raj Nagar Extension. pic.twitter.com/58g9gf4dGx
— Punekar News (@punekarnews)இதேபோல கடந்த வாரம் டெல்லியில் தலைநகர் டெல்லியில் ஒரு குழந்தை நாய்களால் தாக்கப்பட்டது. ஜனவரி 9ஆம் தேதி, டெல்லியின் ரோகினி பகுதியில் ஏழு வயது சிறுமியை பக்கத்து வீட்டு அமெரிக்கன் புல்லி நாய் தாக்கியுள்ளது. ஜனவரி 2ஆம் தேதி வடக்கு டெல்லியின் புராரியில் ஒன்றரை வயதுச் சிறுமியை நாய் தாக்கியதில், அச்சிறுமிக்கு மூன்று இடங்களில் எலும்புமுறிவு ஏற்ப்பட்டது. சிறுமியும் தாத்தாவும் வாக்கிங் சென்றபோது நாய் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தெருநாய்களால் தாக்கப்பட்ட சம்பவங்களின் வீடியோக்களை சமீபகாலமாக அடிக்கடி பார்க்க முடிகிறது. இவை பொதுமக்கள் மத்தியில் தெருநாய்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் வளாகத்திற்குள் தெருநாய்களுக்கு உணவளிக்கக்கூடாது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
நாய்களின் இதுபோன்ற பல கொடூரமான தாக்குதல் தொடர்ச்சியாக நடப்பதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக வேண்டும் எனவும் பொதுமக்கள் கோருகின்றனர்.
ரயில்வே லோயர் பர்த் விதிமுறையில் மாற்றம்! இனி இவங்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்!