Omicron : மகாராஷ்டிராவில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான்… பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு!!

By Narendran SFirst Published Dec 14, 2021, 8:23 PM IST
Highlights

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது.

இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் அதிகபட்சமாக மும்பையில் இதுவரை 20 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்.  ராஜஸ்தானில் 9 பேர், டெல்லியில் 2 பேர், குஜராத்தில் 4 பேர், கர்நாடகாவில் 3 பேர் சண்டிகர், ஆந்திரா, கேரளாவில் தலா ஒருவர் என இதுவரை 41 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் டெல்லியில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 45 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து மகாராஷ்டிரா வந்த மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 28 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே பிரிட்டன் நாட்டில் ஒமைக்ரான் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்திருப்பது உலக நாடுகளை கலக்கமடைய செய்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. ஆகவே இந்தியாவிலும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

click me!