சத்தமின்றி புகுந்து விளையாடும் ஒமிக்ரானில் புதிய மாறுபாடு.. வெளியான பகீர் தகவல்.. இந்தியாவில் தான் அதிகமாம்.!

By vinoth kumarFirst Published Jan 24, 2022, 6:02 AM IST
Highlights

முதன் முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது 3வது அலை ஏற்பட்டுள்ளது. இதன் தினசரி தொற்று எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. அதேநேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

ஒமிக்ரானின் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது பெருநகரங்களில் வேகமாக பரவி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரான் என பல வகைகளில் பரவி வருகிறது. முதன் முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது 3வது அலை ஏற்பட்டுள்ளது. இதன் தினசரி தொற்று எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. அதேநேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமின்றி, உள்நாட்டிலேயே பரவும் வகையில், ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் சமூகப் பரவல் கட்டத்தை எட்டி இருப்பதாக ஐஎன்எஸ்ஏசிஓஜி அமைப்பு கூறி உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு, கொரோனா வைரஸ்களின் மரபணுக்களை வரிசைப்படுத்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 10ம் தேதி தயாரிக்கப்பட்ட இதன் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில், இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது சமூகப் பரவல் கட்டத்தை எட்டி உள்ளது. பல பெருநகரங்களில் இது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. புதிய தொற்றுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. ஒமிக்ரானின் மரபணு ‘எஸ் ஜீன்’ என அழைக்கப்படுகிறது. தற்போது, இந்த மரபணுவிலும் மாற்றங்கள் ஏற்பட்டு புதிய வகை மரபணுக்கள் உருவாகி, பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே, பல்வேறு நாடுகளில் ஒமிக்ரானின் புதிய வகையான பிஏ.1 கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிஏ.2 எனும் புதிய துணை மாறுபாடு இந்தியாவில் பெரும்பாலானோருக்கு தொற்றி உள்ளது. அதே நேரம், பிரான்சில் கண்டறியப்பட்ட ஐஎச்யு (பி.1.640.2) எனும் புதிய வகை வைரஸ் இந்தியாவில் யாருக்கும் பரவவில்லை. இது தற்போது கவலைதரும் வைரசாக இல்லை. இனி வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடம் இருந்து மட்டுமின்றி, உள்நாட்டவர்களிடம் இருந்தே இந்த பிஏ.2 வரை ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஏ.2 துணை மாறுபாடு இந்தியா, சுவீடன், டென்மார்க் உள்ளிட்ட 40 நாடுகளில் பரவி உள்ளது. 

click me!