டெல்லி உயிரியல் பூங்காவில் புலி அதிர்ச்சி மரணம்..!

By Manikandan S R SFirst Published Apr 25, 2020, 9:23 AM IST
Highlights

டெல்லியில் இருக்கும் உயிரியல் பூங்காவில் பெண் புலி ஒன்று திடீரென மரணம் அடைந்திருப்பது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது

கடந்த டிசம்பர் மாதத்தில் சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் உலகத்தின் 210 நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 28 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 1,97,245 ஆக அதிகரித்திருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்று அசுர வேகம் எடுத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 23,452 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு 723 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனிடையே மனிதர்களை மட்டுமே தாக்கும் என கருதப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது விலங்குளையும் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் இது உறுதியான நிலையில் பல்வேறு நாடுகளில் உயிரியல் பூங்காக்களில் சோதனைகள் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் டெல்லியில் இருக்கும் உயிரியல் பூங்காவில் பெண் புலி ஒன்று திடீரென மரணம் அடைந்திருப்பது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. டெல்லியில் இருக்கும் உயிரியல் பூங்காவில் கல்பனா என்கிற 14 வயதான பெண் புலி பராமரிக்கப்பட்டு வந்தது. சிறுநீரகக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த புலிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக புலி மரணம் அடைந்தது.

தெறிக்கவிடும் திருநெல்வேலி..! 63ல் 57 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம்..!

இது உயிரியல் பூங்காவின் ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பிறகு புலியின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. புலியிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் பெரேலியில்யில் இருக்கும் கொரோனா பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டது. பரிசோதனைகளின் முடிவில் புலிக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்து. ஏற்கனவே அமெரிக்காவில் 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவில் புலி ஒன்று திடீரென மரணம் அடைந்தது பரபரப்பை கிளப்பியிருந்தது.

click me!