பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவது டிச. 30க்குப் பின்னும் நீட்டிப்பு?

 
Published : Nov 24, 2016, 09:26 AM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவது  டிச. 30க்குப் பின்னும் நீட்டிப்பு?

சுருக்கம்

பழைய ரூ.500, ரூ1000 நோட்டுகளை மாற்றும் காலம் தேவைப்பட்டால் டிசம்பர் 30-ந் தேதிக்கு பின்னும் நீட்டிக்கப்படலாம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகல் ரோகத்கி நேற்று தெரிவித்தார்.

ரூபாய் நோட்டு தடை விவகாரத்தில் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கலாகும் வழக்குகளை விசாரிக்கக் கூடாது.  உச்ச நீதிமன்றத்தில் மட்டும் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு  மனு தாக்கல் செய்து இருந்தது.

அந்த மனுவை கடந்த 18-ந் தேதி தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ‘மக்களை துன்புறுத்தினால் கலவரம் வெடிக்கும்’ என எச்சரித்தனர். மேலும், இந்த விவகாரத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து 23-ந்தேதி மனு தாக்கல் செய்ய மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கிக்கு உத்தரவிட்டனர்.

விசாரணை

அதன்படி, இந்த மனு தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதிகள் டி.ஓய். சந்திரசுத், எல். நாகேஸ்வர ராவ் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

தடைவிதிக்க முடியாது

அப்போது, நீதிபதிகள் கூறுகையில், “ மத்திய அரசு ரூ.500, ரூ1000 நோட்டுகளை தடை செய்த உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட மக்கள் மாநில உயர் நீதிமன்றங்களிலும், கீழமை நீதிமன்றங்களிலும் தாக்கல் செய்யும் வழக்குகளுக்கு தடை விதிக்க முடியாது.

 விவசாயிகள் வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே வங்கியில் இருந்து எடுக்க முடியும் என்ற உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தடை செய்யப்பட்ட ரூ.1000, ரூ.500 நோட்டுகளை மருத்துவமனை, பெட்ரோல்பம்ப்  உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தலாமா? என்றும், ஏ.டி.எம். மையங்களில் போதுமான பணம் நிரப்பி வைக்குமாறு உத்தரவிடுங்கள் என்றும்  என இதுபோல் பல்வேறு விஷயங்களுக்காக உயர் நீதிமன்றங்களை மக்கள் அனுகுகிறார்கள்.

மத்திய அரசின் இந்த  உத்தரவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு நேர்ந்த பாதிப்பை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றத்தில் நீதி கேட்கும் போது, அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கலாம்'' என தெரிவித்தனர்.

கேள்வி

ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், மத்தியஅரசு போதுமான அளவு பணப் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுத்து இருக்கும் என்று நினைக்கிறோம். இப்போது என்ன நிலை நீடிக்கிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

திட்டம் வெற்றி

மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி வாதிடுகையில், “ கடந்த 8-ந்ேததி அறிவிப்புக்குப் பின், நாட்டின் சூழ்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மத்தியஅரசின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு வெற்றி அடைந்துள்ளது. வங்கிகளில் இதுவரை ரூ.6 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் ரூ.10 லட்சம் கோடி வரும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

ரூ.15 லட்சம் என்றீர்கள்?

பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.15 லட்சம் கோடி இருக்கும் என்று கூறப்பட்டது, நீங்கள் ரூ.10 லட்சம் தான் டெபாசிட் ஆகும் என்று கூறுகிறீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கூட்டம் குறைந்தது

இதற்கு பதில் அளித்த முகுல் ரோகத்கி, “ பணம் டெபாசிட் செய்தது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வேன் என்றார்.

மேலும், அவர் கூறுகையில், மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், தபால் நிலையங்கள் ஆகியவற்றின் முன் பணத்துக்காக மக்கள் நிற்கும் வரிசையின் அளவு குறைந்துவிட்டது.

நீட்டிப்பு?

தேவைப்பட்டால் வங்கிகள், தபால் நிலையங்களில் ரூ.1000, ரூ500 நோட்டுகளை மாற்றும் திட்டத்தை டிசம்பர் 30-ந் தேதிக்கு பின் நீட்டிப்படலாம்.

நாட்டில் இப்போது பணப்பற்றாக்குறை என்று ஏதும் இல்லை. பணத்ைத நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்வதில்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது'' என்று ெதரிவித்தார்.

ஒத்திவைப்பு

மத்தியஅரசின் பதிலால் திருப்தி அடையாத நீதிபதிகள், மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அத்துனை மனு தாரர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், இந்த உத்தரவுக்கு எதிராக ஏதாவது ஒரு உயர்நீதிமன்றத்திலோ அல்லது  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று மத்தியஅரசின் மனு குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கை டிசம்பர் 2-ந்தேதிக்கு உத்தரவிட்டனர்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!