வணிக நிறுவன பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இதன் காரணமாக உணவு விடுதிகளில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சிலிண்டர் விலை உயர்வு
சர்வதேச சந்தையில் நிலவும் கஞ்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகராண இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஏறி இறங்கி வந்த சிலிண்டர் விலை கடந்த இரண்டு மாதமாக உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் வணிக நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2023 முதல், வணிக சிலிண்டர்களின் விலை அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் புத்தாண்டுப் பரிசு! மாதம் 5 கிலோ உணவு தானியங்கள்!
பொதுமக்கள் அதிர்ச்சி
அதே சமயம், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.1,068.50க்கு விற்பனையகிறது.வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் விலை உயர்ந்தது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்