ஒடிசா ரயில் விபத்து விசாரணையில் பாலசோர் ஸ்டேஷன் சிக்னல் ஜே.இயின் இல்லத்திற்கு சிபிஐ சீல் வைத்துள்ளது.
ஒடிசா, பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ஆம் தேதி 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து நேரிட்டது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 292 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
292 பேர் உயிரிழந்த மற்றும் நூற்றுக்கணக்கான மக்களை காயப்படுத்திய ஒடிசா ரயில் விபத்து குறித்து விசாரிக்கும் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, நேற்று கடந்த (திங்கள்கிழமை) பாலசோரில் உள்ள சோரோ பிரிவு சிக்னல் ஜூனியர் பொறியாளர் அமீர் கான் வீட்டிற்கு சீல் வைத்ததாக கூறப்படுகிறது.
ஜூன் 2 ஆம் தேதி பஹானாகா ரயில் நிலையம் அருகே பயங்கர விபத்து நடந்ததிலிருந்து அவரது குடும்ப உறுப்பினர்களுடன் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. ஜூனியர் பொறியாளரின் வாடகை வீட்டிற்கு சிபிஐ சீல் வைத்தது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
சமீபத்தில், சிபிஐ குழு அமீர் கானிடம் விசாரணையின் ஒரு பகுதியாக அடையாளம் தெரியாத இடத்தில் விசாரித்தது. விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்தி ஜூன் 16 ஆம் தேதி பாலசோரிலிருந்து மத்திய புலனாய்வுக் குழு வெளியேறியதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன, ஆனால் அதிகாரிகள் மீண்டும் திங்கள்கிழமை திரும்பி வந்து ஜேஇ வீட்டிற்கு சீல் வைத்தனர்.
ஜூன் 18 அன்று, பாலசோர் ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 292 ஆக உயர்ந்தது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 24 வயது பயணி கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் காயமடைந்து உயிரிழந்தார். காயமடைந்த 205 பேர் SCB மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 45 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். இதில் 12 பேர் ஐசியுவில் உள்ளனர் என்று அரசு தரப்பபில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும்.. விஜய்க்கு தடை போடும் திமுக.! அண்ணாமலை சொன்ன பகீர் தகவல்
மணிப்பூர் வன்முறை: குறிவைத்து தாக்கப்படும் பாஜக தலைவர்களின் வீடு, அலுவலகங்கள்.. பின்னணி என்ன?