சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (MoCA) அனைத்து விமான நிறுவனங்களுக்கும் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கோரமண்டல் ரயிலில் பயணித்தவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்லவும் அங்கு இருப்பவர்கள் சென்னைக்கு அழைத்து வரவும் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
ஒடிசா ரயில் விபத்துக்கு மத்தியில், புவனேஸ்வருக்கு வரும் விமானங்களின் கட்டணங்கள் அசாதாரணமாக அதிகரித்து வருவதைக் கண்காணிக்குமாறு விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (MoCA) அனைத்து விமான நிறுவனங்களுக்கும் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க..ஒரே பாதையில் வந்த ரயில்கள்.. சிக்னல் பிரச்னை.! கோரமண்டல் ரயில் விபத்தில் நடந்தது என்ன?
"ஒடிசாவில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தை கருத்தில் கொண்டு, புவனேஸ்வர் மற்றும் மாநிலத்தின் பிற விமான நிலையங்களுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானக் கட்டணங்கள் ஏதேனும் அசாதாரணமாக அதிகரித்தால் அதைக் கண்காணிக்கவும், அது குறித்து தேவையான நடவடிக்கை எடுக்கவும், அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது," என்று MoCA தெரிவித்துள்ளது.
புவனேஸ்வருக்கு வரவோ அல்லது செல்லவோ ரத்து செய்வதற்கும், மறு திட்டமிடலுக்கும் கட்டணம் எதுவும் வசூலிக்க வேண்டாம் என்று அமைச்சகம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. "இந்தச் சம்பவத்தின் காரணமாக விமானங்களில் ஏதேனும் ரத்து மற்றும் திட்டமிடல் அபராதம் இல்லாமல் செய்யப்படலாம்" என்று MoCA அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையத்தில் மூன்று தனித்தனி பாதைகளில் விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..ரயில் விபத்தில் தமிழர்கள் எத்தனை பேர் பலி.? ஒடிசாவில் இருக்கும் தமிழ்நாடு அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்!!