அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய புவனேஸ்வரைச் சேர்ந்த அர்ச்சனா நாக் என்ற இளம் பெண் கைது செய்யப்பட்டிருப்பது ஒடிசாவில் உள்ள பல முக்கியப் பிரமுகர்களுக்கு பீதியடைய வைத்துள்ளது.
அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய புவனேஸ்வரைச் சேர்ந்த அர்ச்சனா நாக் என்ற இளம் பெண் கைது செய்யப்பட்டிருப்பது ஒடிசாவில் உள்ள பல முக்கியப் பிரமுகர்களுக்கு பீதியடைய வைத்துள்ளது. முன்னதாக ஒடிசா திரைப்பட தயாரிப்பாளர் அக்ஷயா பரிஜா புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், அர்ச்சனாவும் மற்றொரு பெண்ணான ஷ்ரதாஞ்சலி பெஹேராவும் தன்னிடம் ரூ.3 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக நயபள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் நான் பணத்தை கொடுக்கத் தவறினால், அவர்கள் என்னை துண்டு துண்டாக வெட்டி விடுவார்கள் என்று அவர்கள் மிரட்டல் விடுத்ததாக திரைப்பட தயாரிப்பாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, பாரிஜா ஒரு பெண்ணுடன் இருக்கும் சில ஆபாசமான படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. இதனிடையே ஒடிசா திரைப்பட தயாரிப்பாளர் புகாரின் பேரில் புவனேஸ்வரைச் சேர்ந்த அர்ச்சனா நாக் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: காலிஸ்தானி பிரிவினைவாத விவகாரம்... மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவு... முழு விவரம் உள்ளே!!
பணக்கார வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக உயர்மட்ட பாலியல் தொழில் செய்யும் பெண்களை பணிக்கு அமர்த்தியாக கூறப்படும் அர்ச்சனா நாக்கின் தேன்பொறியில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) மற்றும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 தலைவர்கள், பிரபல தொழிலதிபர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆகியோர் சிக்கியுள்ளனர். இவை அனைத்தும் ஒடியா திரைப்பட தயாரிப்பாளர் அக்ஷயா பரிஜா தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக ஒரு பெண் புகார் அளித்ததை அடுத்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுக்குறித்து புவனேஸ்வர் துணை போலீஸ் கமிஷனர் பிரதீக் சிங் கூறுகையில், அர்ச்சனாவைக் கைது செய்து, புவனேஸ்வரில் உள்ள அவரது வீட்டில் இருந்து நான்கு மொபைல் போன்கள், இரண்டு டேப்லெட்டுகள், ஒரு லேப்டாப், பென்டிரைவ் மற்றும் பாஸ்புக்குகளை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கழுதை கறி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா ? ஆந்திராவில் அடிச்சு தூக்கும் விற்பனை !
குற்றம் சாட்டப்பட்ட அந்த இளம்பெண்ணிடம் இருந்து பல புகழ்பெற்ற நபர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ கிளிப்புகள் போன்ற சில ஆதாரங்களை போலீசார் கண்டுபிடித்தனர். ஆதாரங்களின்படி, அர்ச்சனாவின் உத்தரவின் பேரில் பணிபுரியும் சிறுமிகள் அரசியல் புள்ளிகள், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோருடன் உடல் ரீதியான உறவுகளை வைத்திருந்ததாகவும், மறைக்கப்பட்ட கேமராக்கள் அவர்களின் தனிப்பட்ட தருணங்களை படம்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், அர்ச்சனா அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பணம் பறித்ததும் தெரியவந்தது. இதனிடையே எதிர்க்கட்சியான பாஜகவும், காங்கிரஸும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்குக் கோரியுள்ள நிலையில் அர்ச்சனா நாக்கின் கைது அம்மாநில அரசியலை கலகலக்க வைத்துள்ளது.