காலிஸ்தானி பிரிவினைவாத விவகாரம்... மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவு... முழு விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Oct 12, 2022, 9:26 PM IST

காலிஸ்தானி பிரிவினைவாத அமைப்பு விவகாரத்தில் இந்தியாவின் கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்ததால் மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


காலிஸ்தானி பிரிவினைவாத அமைப்பு விவகாரத்தில் இந்தியாவின் கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்ததால் மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனுக்கு எதிரான மத்திய அரசின் வழக்கு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் சார்பு அமைப்பான சீக்கியர்களுக்கான நீதிக்கான (SFJ- Sikhs for Justice) நிறுவனர் மற்றும் சட்ட ஆலோசகரான குர்பத்வந்த் சிங் பன்னூனுக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட வேண்டும் என  இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் போதுமான தகவல்களை வழங்கத் தவறிவிட்டதாக கூறி இந்த கோரிக்கையை, இன்டர்போல் நிராகரித்துள்ளது. முன்னதாக பஞ்சாப்பை சேர்ந்த காலிஸ்தானி பிரிவினைவாத அமைப்பானது தனிநாடு கோரியும், இந்தியாவுக்கு எதிராக சதிவேலைகளையும் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதையும் படிங்க: கழுதை கறி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா ? ஆந்திராவில் அடிச்சு தூக்கும் விற்பனை !

Tap to resize

Latest Videos

வௌிநாட்டில் பதுங்கியிருக்கும் குர்பத்வந்த் சிங்குக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்குவதற்காக மத்திய அரசின் தரப்பில் சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், மத்திய அரசின் கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், குர்பத்வந்த் சிங்குக்கு எதிரான போதுமான குற்றச்சாட்டுகள், தகவல்கள் மற்றும் ஆவணங்களை இந்திய அதிகாரிகள் முறையாக சமர்பிக்கவில்லை. சிறுபான்மையினர் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு எதிராக உபா சட்டம் பாய்வது குறித்தும் உரிய நடைமுறைகள் பின்பற்றவில்லை. குறிப்பாக அவர்களின் உரிமைகள் மதிக்கப்படவில்லை. இருந்தாலும், காலிஸ்தானி அமைப்பானது பிரிவினைவாத அமைப்பு என்பதை ஒத்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 2020 இல் பஞ்சாபின் மோகாவில் உள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் மூவர்ணக் கொடியை சேதப்படுத்தியது மற்றும் காலிஸ்தான் கொடியை ஏற்றியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுடன் குர்பத்வந்த் சிங் பன்னூன் மற்றும் SFJ மீது என்.ஐ.ஏ மூன்று குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.

இதையும் படிங்க: அவன் ஒரு சீரியல் கில்லர், தெரியுமா ? கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்

ஜூலை 2019 இல், உள்துறை அமைச்சகமானது இந்தியாவின் உள் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் நாட்டின் அமைதி, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை சீர்குலைக்கும் திறன் கொண்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என SFJ-ஐ சட்டவிரோத அமைப்பாக அறிவித்தது. ஏப்ரல் 15 அன்று, மாநிலத்தின் துணை ஆணையர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களின் அலுவலகங்களில் காலிஸ்தான் கொடியை ஏற்றுமாறு மக்களைக் கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டதாகக் கூறப்படும் குர்பத்வந்த் சிங் பன்னூன் மீது தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் ஹரியானாவில் உள்ள குர்கான் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. மே 8 அன்று, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மஷாலாவில் உள்ள விதான் சபையின் எல்லையில் காலிஸ்தான் சார்பு பேனரைக் கட்டியதற்காகவும், ஜூன் 6, 2022-ஐ காலிஸ்தான் வாக்கெடுப்பு நாள் என்று அறிவிப்பு செய்ததற்காகவும் உபா சட்டத்தின் கீழ் குர்பத்வந்த் சிங் பன்னூன் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது, இமாச்சல பிரதேச டி.ஜி.பி சஞ்சய் குண்டாவ், பன்னூன் மீது பன்னூனுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது.

click me!