அசைவம் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு செல்வதில் தவறில்லை… ஸ்ரீ ராம் சேனா நிறுவனர் சர்ச்சை கருத்து!!

By Narendran S  |  First Published Aug 22, 2022, 8:55 PM IST

அசைவம் சாப்பிட்டுவிட்டு கோயில்களுக்குச் செல்வதிலும் எந்த தவறும் இல்லை என்று ஸ்ரீ ராம் சேனாவின் நிறுவனர் பிரமோத் முத்தாலிக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


அசைவம் சாப்பிட்டுவிட்டு கோயில்களுக்குச் செல்வதிலும் எந்த தவறும் இல்லை என்று ஸ்ரீ ராம் சேனாவின் நிறுவனர் பிரமோத் முத்தாலிக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் குடகு மாவட்டத்தில் உள்ள பசவண்ணா கோவிலுக்கு சித்தராமையா இறைச்சி சாப்பிட்டு வந்ததாக சர்ச்சை எழுந்தது. இதை அடுத்து குடகில் உள்ள கோவிலில் அசைவ உணவை உட்கொண்டதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மீது கர்நாடகாவில் ஆளும் பாஜக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் அசைவம் சாப்பிடுவதிலும், கோயில்களுக்குச் செல்வதிலும் தவறில்லை என்று ஸ்ரீ ராம் சேனாவின் நிறுவனர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவை உட்கொள்கிறார்கள்.

இதையும் படிங்க: தமிழகப் பொருளாதாரத்தை சீரழிக்கும் பிடிஆர் தியாகராஜனின் ஈகோ, ஜாலப் பேச்சு: பாஜக தலைவர் அண்ணாமலை விளாசல்

Tap to resize

Latest Videos

இறைச்சி கடவுளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதில் எந்தத் தவறும் இல்லை, இது விவாதத்திற்குரிய விஷயமல்ல என்று தெரிவித்தார். முன்னதாக சித்தராமையா இறைச்சி சாப்பிட்டுவிட்டு கோயிலுக்குள் நுழைந்த சர்ச்சை குறித்து பாஜக எம்எல்ஏ பசவனகவுடா பாட்டீல் யத்னால் கூறுகையில், இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்றை சாப்பிட்டுவிட்டு சித்தராமையா மசூதிக்குள் நுழைய முடியுமா. அப்படி நுழைந்தால் அவரது உண்மையான சக்தியை நாங்கள் அப்போது அறிவோம். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு குறிப்பிட்ட பாரம்பரியம் பின்பற்றப்பட வேண்டும். ஒரு சில இடங்களில் அசைவம் சாப்பிட்டுவிட்டு செல்ல முடியாது. ஒரு சில இடங்களில் கூட கோவில்களுக்குள் நுழையும் முன் வேஷ்டி, சட்டைகளை கழற்றுவது வழக்கம்.

இதையும் படிங்க: நீங்க செலவுசெஞ்சதுக்கு நாங்க பணம் கொடுக்கணுமா'! ஆளுநரிடம் பவரைக் காட்டிய பஞ்சாப் அரசு

சித்தராமையாவாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, மத உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்று தெரிவித்தார். இதேபோல், பாஜக துணைத் தலைவர் விஜயேந்திரர் கூறுகையில், சைவம் மற்றும் அசைவ உணவுகளை சாப்பிட அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால், யாராவது இறைச்சி சாப்பிட்டுவிட்டு கோயிலுக்குச் செல்ல விரும்பினால் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அரசு மதத்தின் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது, மேலும் ஏராளமான பக்தர்களையும் கொண்டுள்ளது. எனவே உயர் பதவிகளில் இருப்பவர்கள் இது தொடர்பாக பகிரங்க அறிக்கைகளை வெளியிடும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

click me!