போதை ஏறவே மாட்டேங்குது.. புகார் கடிதம் எழுதிய நபர்... ஷாக் ஆன உள்துறை அமைச்சர்..!

By Kevin KaarkiFirst Published May 9, 2022, 12:13 PM IST
Highlights

தான் வசிக்கும் பகுதியில் உள்ள மதுமான கடை ஒன்றில் மது வாங்கி குடித்தால் போதை ஏறவே இல்லை என குறிப்பிட்டு இருக்கிறார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தை சேர்ந்த நபர் எழுதிய இரண்டு வெவ்வேறு புகார் கடிதங்கள் காவல் துறையினருக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. 

போதை ஏறவில்லை:

வாகன பார்க்கிங் மையத்தை நடத்தி வரும் நபர் ஒருவர் அம்மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் நரோட்டம் மிஷ்ராவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் அவர், தான் வசிக்கும் பகுதியில் உள்ள மதுமான கடை ஒன்றில் மது வாங்கி குடித்தால் போதை ஏறவே இல்லை என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அந்த மதுபான கடையை நடத்தி வருபவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். 

இவர், உஜ்ஜைன் மாவடத்தின் ஷிர்சாகர் காட்டி பகுதியில் உள்ள உரிமம் பெற்ற மதுக் கடை ஒன்றில் உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு குவாட்டர் பாட்டில்களை வாங்கி குடித்ததாகவும், ஆனாலும் அந்த மதுவில் போதை ஏறவில்லை என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

போதை ஏறாத மதுபானம் விற்பனை செய்யும் மதுக் கடையில் விரைந்து சோதனை நடத்த வேண்டும் என்றும் அந்த புகாரில் அவர் தெரிவித்து உள்ளார். புகார் கடிதத்தை உள்துறை அமைச்சர் மட்டும் இன்றி உள்ளூர் காவல் நிலையம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி இருக்கிறார்.

இரண்டாவது கடிதம்:

மத்திய பிரதேச மாநிலத்தின் தரோட் கிராமத்தை சேர்ந்தவர் ஜித்தேந்திரா பக்ரி காவல் துறைக்கு புகார் அளித்து இருக்கிறார். தனது வீட்டின் வெளியில் விட்டுச் சென்ற செருப்பை, மே 4 ஆம் தேதி மர்ம நபர்கள் யாரோ களவாடி சென்று விட்டதாகவும், அந்த செருப்பு குற்ற சம்பவங்கள் நடைபெற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டால், அதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

“எனது 180 ரூபாய் மதிப்புள்ள செருப்பு காணாமல் போய் விட்டது. அந்த செருப்பு கொலை கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் நடந்த இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டால், அந்த சம்பவத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று புகார் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த கடிதத்துடன் தான் பயன்படுத்தி வந்த செருப்பின் புகைப்படத்தையும் அந்த நபர் புகாருடன் இணைத்து இருக்கிறார். 

click me!