காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி விட்டது........ வெளிநாட்டு தூதர்கள் ஒப்புதல்...!

Web Team   | Asianet News
Published : Feb 14, 2020, 04:53 PM IST
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி விட்டது........ வெளிநாட்டு தூதர்கள் ஒப்புதல்...!

சுருக்கம்

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி விட்டது என அங்கு உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள சுற்றுப்பயணம் மெற்கொண்டிருந்த வெளிநாட்டு தூதர்கள் தெரிவித்தனர்.  

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும், உண்மை நிலவரத்தை அறியவும் 2 நாள் பயணமாக 15 நாடுகளை சேர்ந்த தூதர்கள் கடந்த மாதம் அங்கு சென்று பார்வையிட்டனர். இந்நிலையில் ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்கா, வளைகுடா பகுதி மற்றும் இதர ஆசிய நாடுகளை சேர்ந்த 25 வெளிநாட்டு தூதர்கள் அடங்கிய 2வது குழு, நேற்றுமுன்தினம் காஷ்மீர் சென்றனர். இரண்டு நாள் பயணமாக அவர்கள் அங்கு சென்றனர்.

முதல் நாளில் அவர்கள் ஸ்ரீநகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சிட்டி சென்டர், ஜஹாங்கிர் சவுக், ராவால்புரா மற்றும் ராஜ்பாக் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களிடம் பேசினர். நேற்று ஜம்மு சென்ற அவர்கள் லெப்டினல் ஜெனரல் கே.ஜே.எஸ். தில்லான், கமாண்டர் எக்ஸ்.வி. கார்ப்ஸ் ஆகியோரை சந்தித்தனர். அப்போது வெளிநாட்டு தூதர்களிடம் பாதுகாப்பு நிலவரம் குறித்து இந்திய ராணுவ அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர்.

ஜம்மு அண்டு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் ஜி.எஸ். முர்மு மற்றும் தலைமை செயலாளர் பி.வி.ஆர். சுப்பு மற்றும் மூத்த நிர்வாக அதிகாரிகளை தூதர்கள் சந்தித்து பேசினர். ஜம்மு அண்டு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையும் வெளிநாட்டு தூதர்கள் சந்தித்து பேசினர். பின் பொதுமக்களையும் சந்தித்து பேசினர்.

நேற்று மாலை வெளிநாட்டு தூதர்கள் டெல்லி திரும்பினர். காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக பெரும்பாலான வெளிநாட்டு தூதர்கள் தங்களது பயணத்தின் முடிவில் தெரிவித்தனர். அதேசமயம்  ஐரோப்பிய யூனியனை சேர்ந்த சில வெளிநாட்டு தூதர்களுக்கு காஷ்மீர் நிலவரம் திருப்தி தரவில்லை என தெரிகிறது. இந்தியாவுக்கான மெக்சிக்கோ தூதர் எப்.எஸ்.லொட்பி கூறுகையில், காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. அங்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால் சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். அதிகாரிகளும் அதனை உருவாக்குவதில் ஆர்வமாக உள்ளனர் என தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!