
பெரு மழை, வெள்ளம், நிலசரிவு போன்றவற்றால் கேரளம் பேரழிவைச் சந்தித்துள்ள நேரத்தில், நாடு முழுவதும் மதம், இனம், மொழியைக் கடந்து மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு அம்மாநிலத்துக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்.
ஆனால், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பினர் மட்டும் தொடர்ந்து மத துவேஷத்தை , விதைத்து வருவதாக கூறப்படுகிறது.. கேரளத்திற்கு இந்துக்கள் உதவக் கூடாது என்று நாடு தழுவிய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் சாமியார் சக்ரபாணி மகராஜ் என்பவரும் கேரளத்திற்கு இந்துக்கள் உதவக் கூடாது என்று கூறியுள்ளார்.“நானும் கேரளத்துக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்; ஆனால் யார் பசு இறைச்சியை உண்ணாமல் தவிர்க்கின்றனரோ அவர்களுக்கு மட்டுமே இந்துக்கள் உதவ வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பசுக்களை வேண்டுமென்றே சாப்பிட்டும், அதை சாலையில் வெட்டியும் இந்து மதத்தை யார் வேதனை கொள்ள வைக்கின்றனரோ அவர்களை மன்னிக்கவேக் கூடாது என்று சக்ரபாணி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கேரளத்தில் பசுக்களை வதைத்ததால்தான் அந்த மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது; இந்த பூமியில்யார் பாவம் செய்கிறார்களோ அவர்களை இயற்கை தண்டிக்கும்” என்றும் சாமியார் சக்ரபாணி மகராஜ் தெரிவித்துள்ளார். அவரின் இந்த வன்மம் மிகுந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.