அம்பானியை அடுத்து அதானி… கேரளா வெள்ள நிவாரணத்துக்கு எத்தனை கோடி வழங்கியுள்ளது தெரியுமா?

By Selvanayagam PFirst Published Aug 24, 2018, 7:46 AM IST
Highlights

கனமழை, வெள்ளம் காரணமாக மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு அதானி குழுமத்தின் சார்பில் 25 கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், 25 கோடி ரூபாய் மறு சீரமைப்பு மற்றும் மறு குடியமர்த்தல் பணிக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழைகொட்டித் தீர்த்தது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்தன. கேரளா  முழுவதும் வெள்ளக் காடாக மாறியது.

தற்போது மழை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். அம்மக்களின் துயரத்தில் நாடே பங்கெடுத்துள்ளது.

இந்தியாவில் உள்ளபிற மாநிலங்கள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள், திரை நட்சத்திரங்கள், பொது மக்கள் என பல் தரப்பினரும் கோடிக்கணக்கான ரூபாய் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.மத்திய அரசு 600 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதி ஒதுக்கியுள்ளது.

உலகில் மிகப் பெரிய நிறுவனமாக ரிலையன்சின் அம்பானி 71 கோடி ரூபாய் கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாகவும், பொருட்களாகவும் வழங்கியுள்ளது.

இதனிடையே அதானி நிறுவனம் கனமழை, வெள்ளம் காரணமாக மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு அதானி குழுமத்தின் சார்பில் 25 கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், 25 கோடி ரூபாய் மறு சீரமைப்பு மற்றும் மறு குடியமர்த்தல் பணிக்காகவும் வழங்கியுள்ளது.

மேலும் வெள்ள நிவாரண நிதிக்கு அதானி குழும ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை வழங்க இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது

click me!