கட்டுன பொண்டாட்டி கூட ஓட்டு போடலையே ! புலம்பிய சுயேட்சை வேட்பாளர் !!

Published : May 25, 2019, 07:20 AM IST
கட்டுன பொண்டாட்டி கூட ஓட்டு போடலையே !  புலம்பிய சுயேட்சை வேட்பாளர் !!

சுருக்கம்

பஞ்சாப்பைச் சேர்ந் சுயேட்சை வேட்பாளர்  ஒருவருக்கு வெறும் 5 ஓட்டக்கள் மட்டே கிடைத்துள்ளன. இதில் என்ன ஆச்சரியம் என்ன என்று கேட்கிறீர்களா ? அவரது வீட்டிலேயே 9 ஓட்டுக்கள் உள்ள நிலையில், அவரது மனைவி கூடஅவருக்கு ஓட்டுப் போடாததால் கதறி அழுதுள்ளார்.  

அண்மையில் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியில் நீத்து ஷட்டர்ன் வாலா  என்பவர் சுயேட்சையாப போட்டியிட்டார்.

நேற்று மும்தினம் நடைபெற்ற வக்கு எண்ணிக்கையின் போது நீத்து ஷட்டர்ன் வாலாவுக்கு வெறும் 5 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது.  தனக்கு 5 ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது என்பதை தெரிந்து கொண்ட நீத்து ஷட்டர்ன் வாலா கதறி அழுதார்.

இதைப் பார்த்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்த அதிகாரிகள் அவருக்கு ஆறுதல் கூறி, எதற்காக அழுகிறார் என காரணம் கேட்டனர். அப்போது, ''என் வீட்டில் மொத்தம் ஒன்பது உறுப்பினர்கள் உள்ளனர்; அனைவருமே எனக்கு ஓட்டளித்ததாக கூறினர்.

ஆனால், எனக்கு ஐந்து ஓட்டுகள் மட்டுமே கிடைத்து உள்ளன; என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே, எனக்கு துரோகம் செய்து விட்டனர். நான் கட்டிய என் மனைவி கூட எனக்கு வாக்களிக்கவில்லை என கூறி  மீண்டும்  அழுதார்.

மேலும் இனி, தேர்தலில் போட்டியிட மாட்டேன், என கூறிய அவரை அதிகாரிகள் ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

மாற்றப்படும் நிதின் கட்கரி? மத்திய அமைச்சரவையில் மாற்றமா? உண்மை நிலவரம் என்ன?
ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!