"இனி பாகிஸ்தானுக்கு காய்கறிகள் அனுப்ப முடியாது" - குஜராத் வியாபாரிகள் தடாலடி

Asianet News Tamil  
Published : Oct 09, 2016, 03:52 AM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
"இனி பாகிஸ்தானுக்கு காய்கறிகள் அனுப்ப முடியாது"  - குஜராத் வியாபாரிகள் தடாலடி

சுருக்கம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரி மாவட்டத்தில் பாக். தீவிரவாதிகள் இந்திய ராணுவ முகாம்கள் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் உயிரிந்தனர். அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல்களை அடுத்து, இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தொடர்ந்து மீறி வருவதால் எல்லையில் பதற்றம் எற்பட்டுள்ளது. இதன் காரணமாக எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் குஜராத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு காய்கறி உள்ளிட்ட பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு காய்கறி கொண்டு செல்வதை நிறுத்த குஜராத் காய்கறி வியபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

குறிப்பாக தக்காளி, மிளகாய் உள்ளிட்ட பொருட்களின் சப்ளையை நிறுத்தி உள்ளனர். காய்கறி சப்ளை நிறுத்தப்பட்டதால், குஜராத் விவசாயிகள் மற்றும் காய்கறி வியபாரிகளுக்கு தினமும் ரூ.3 கோடி அளவுக்க வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளன.

இது குறித்து, ஆமதாபாத் காய்கறி முகவர் சங்க பொது செயலாளர் அகமது பட்டேல் கூறுகையில், குஜராத்தில் இருந்து தினமும் 50 டிரக்குகளில் 10 டன் காய்கறிகள் வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது நிலவி வரும் பதற்றம் காரணமாக கடந்த 2 நாட்களாக காய்கறிகள் சப்ளை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது என்றும் இதனால் ரூ.3 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதற் முறையாக தற்போதுதான், பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படும் காய்கறிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்றார். இருநாட்டு உறவுகளும் சரியாகும் வரை காய்கறி சப்ளை நிறுத்தப்பட்டு இருக்கும் என்றும் தெரிவித்த பட்டேல், நாட்டு நலனைவிட தனிமனித நலன் பெரிதல்ல என்றும் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

மு.க.ஸ்டாலினிடம் உருதுபேசச் சொல்லி கேட்பீர்களா..? காஷ்மீர் Ex முதல்வர் மெஹபூபா முப்தி ஆத்திரம்..!
இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!