முடிவுக்கு வந்த கொரோனா கட்டுப்பாடுகள்... ஏப்.2 முதல் மாஸ்க் அணியத் தேவையில்லை!!

Published : Mar 31, 2022, 06:57 PM IST
முடிவுக்கு வந்த கொரோனா கட்டுப்பாடுகள்... ஏப்.2 முதல் மாஸ்க் அணியத் தேவையில்லை!!

சுருக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் முதல் முதலாக கண்டறிப்பட்ட கொரோனா என்னும் கொடிய வைரஸ், உலகின் அனைத்து நாடுகளிலும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியதோடு, பல உயிர்ச் சேதங்களை ஏற்வடுத்தியது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. அந்த வகையில் இந்தியாவில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல லட்சம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன்காரணமாக கோடிக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர். இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டும் தேதி  முதல் முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், தொற்று பரவலை தடுக்க, மக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பின்னர் கொரோனா படிப்படியாக குறையத்தொடங்கியதை அடுத்து மத்திய, மாநில அரசுகள் படிப்படியாக தளர்த்தி வருகின்றன. பின்னர் முழுவதுமாக கொரோனா கட்டுக்குள் வந்ததை அடுத்து கடந்த 2 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த  கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன.  அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 2 முதல் மாஸ்க் அணிய தேவையில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 183 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் இன்றைய நிலவரப்படி 902 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பது உள்ளிட்ட அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் விலக்கிக்கொள்வதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மூலம் நாட்டிலேயே முதல் மாநிலமாக மாஸ்க் அணிய தேவையில்லை என அறிவித்த மாநிலமாக மகாராஷ்டிரா விளக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!